“ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மனசாட்சியே இல்லையா?”: ரசிகர்கள் ஆதங்கம்

ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி, செப்டம்பர் 10ம் தேதி சென்னையில் நடைபெற்றது. ஈசிஆர் சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சரியான ஏற்பாடுகள் செய்யாதது ரசிகர்களிடம் மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்த சர்ச்சைகள் இன்னும் ஓயாத நிலையில், மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் வீடியோவை ஏஆர் ரஹ்மான் ஷேர் செய்திருந்தார்.
அதனைப் பார்த்த ரசிகர்கள், “உங்களுக்கு மனசாட்சியே இல்லையா.. ரசிகர்களின் துயரம் ஆறாத வடுவாக நெஞ்சில் பதிந்து இருக்கிறது. இது குறித்து வருத்தம் தெரிவித்ததோடு நிறுத்திவிட்டீர்கள். கட்டணம் திருப்பித் தரப்படும் என்கிற அறிவிப்பை நீங்கள் நிறைவேற்றவில்லை. மனசாட்சியே கிடையாதா உங்களுக்கு” என்று பதிவிட்டு வருகின்றனர்.
ரசிகர்களின் ஆதங்கத்துக்கு பயந்து, தனது டிவிட்டர், இன்ஸ்டா பக்கங்களில் கமெண்ட் செக்ஷனை ஏஆர் ரஹ்மான் லாக் செய்துவிட்டு, இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
இதையும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்ரனர்.