‘டிஸ்கோ’ : ஆக்ஷன் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்: சர்வதேச ஸ்டைலில் – நவம்பர் 6ல் ரிலீஸ்!
‘அஞ்சக்கள்ளகோக்கன்’ தந்த அதிரடி வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் உல்லாஸ் செம்பனின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘டிஸ்கோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. ‘அங்கமாலி டைரீஸ்’ மேஜிக்கிற்குப் பிறகு, நடிகர்-எழுத்தாளர் செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் மீண்டும் இணையும் இப்படத்திற்குச் செம்பன் வினோத் ஜோஸே கூர்மையான திரைக்கதையை எழுதியுள்ளார்.
செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் அகமது கோல்சினின் ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், தேவ் மோகன், லுக்மேன் அவ்ரான், அர்ஜுன் அசோகன், செம்பன் வினோத் ஜோஸ், சாகர் சூர்யா, விஷ்ணு உன்னிகிருஷ்ணன், ஃபெமினா ஜார்ஜ், கல்யாணி அணில், மீரா வாசுதேவன், காயத்ரி சுரேஷ், செந்தில் கிருஷ்ணா, மணிகண்டன் ஆச்சாரி, அப்பானி சரத், சினோஜ் வர்கீஸ், வினீத் தட்டில் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே பட்டையைக் கிளப்பக் களம் இறங்கியுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அனைவரும் கருப்பு உடையில் துப்பாக்கிகளுடன் சர்வதேச ஹாலிவுட் ஆக்ஷன் பாணியில் அல்ட்ரா-ஸ்டைலிஷ் லுக்கில் மிரட்டுகிறார்கள். டைட்டில் லோகோவில் உள்ள துப்பாக்கிக் குறியீடு, இது ஒரு பக்கா ‘ஹை-வோல்டேஜ் கன்-ஃபைட்’ விருந்தாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. சர்வதேசத் தரத்தில் உருவாகியுள்ள ‘டிஸ்கோ’ திரைப்படம் வரும் நவம்பர் 6 அன்று திரையரங்குகளில் உலகமெங்கும் அலப்பறை செய்ய வருகிறது!
தொழில்நுட்பக் குழு:
-
இயக்கம்: உல்லாஸ் செம்பன்
-
திரைக்கதை: செம்பன் வினோத் ஜோஸ்
-
ஒளிப்பதிவு: ஆர்மோ (Armo)
-
இசை: மணிகண்டன் அய்யப்பா
-
படத்தொகுப்பு: ரோஹித் V.S. வாரியத்
-
கலை இயக்கம்: கோகுல் தாஸ்
-
சண்டைப்பயிற்சி: கலை கிங்சன்
-
ஆடை வடிவமைப்பு: மெல்வி J
-
ஒப்பனை: ரோனெக்ஸ் சேவியர்
-
விஎஃப்எக்ஸ்: ஐடென்ட் லேப்ஸ்
-
விநியோகம்: ஐகான் சினிமாஸ்

