மாம்போ: சிங்கத்தை கொண்டுவரும் பிரபு சாலமன்!

மாம்போ: சிங்கத்தை கொண்டுவரும் பிரபு சாலமன்!

தமிழ்த் திரையுலகில் மைனா, கும்கி, கயல் உள்ளிட்ட படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் பிரபுசாலமன். இவர் இயக்கத்தில் ‘செம்பி’ படம் கடந்த வருட இறுதியில் வெளியானது.

இந்நிலையில் பிரபு சாலமன் இயக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்திற்கு மeம்போ என்று தலைப்பு அறிவிக்கப்பட்டது.

இதில், நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் விஜய்ஸ்ரீ ஹரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் இப்படத்தை தயாரிக்கும் நிலையில் டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படம் ஒரு சிறுவனுக்கும் சிங்கத்திற்கும், இடையேயான உறவை விவரிக்கும் விதமாக உருவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்காக உண்மையான சிங்கத்தை இப்படத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

சிங்கத்தை வைத்து எடுக்கப்படும் முதல் ஆசிய திரைப்படமாக இப்படம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அறிமுக நடிகர், விஜய்ஸ்ரீ ஹரி சிங்கத்துடன் கொஞ்சி விளையாடும் படம் இடம்பெற்று உள்ளது.

இதற்கு முன் யானை, வைத்து கும்கி படம் இயக்கியிருந்தார் பிரபு சாலமன். அப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, தற்போது மீண்டும் ஒரு விலங்கை வைத்து எடுக்கவுள்ளார். இதனால் மம்போ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.