சனாதனம் பற்றி இயக்குநர் அமீர் பேச வேண்டாம்!

சனாதனம் பற்றி இயக்குநர் அமீர் பேச வேண்டாம்!
சென்னையில் அரசுப் பள்ளி ஒன்றில், மூட நம்பிக்கை பேச்சாளர், மகாவிஷ்ணு, மூட நம்பிக்கை பேச்க்களை மாணவர்களிடையே பேசினார். பார்வை மாற்றுத் திறனாளி ஆசிரியரை அவமதித்ததாார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து இயக்குநர் அமீர் அறிக்கை வெளியிட்டார்.
அவரது அறிக்கை:
அதில் சனாதனம் குறித்தும் அமீர் தெரிவித்து இருக்கிறார்.  இது குறித்து பத்திரிகையாளர் டி.வி.சோமு, தனது முகநூல் பக்கத்தில்,  ‘சனாதனம் பற்றி இயக்குநர் அமீர் பேச வேண்டாம்!’ என்ற தலைப்பில் பதிவிட்டு இருக்கிறார்.
அந்த பதிவு:
 “மகாவிஸ்ணுவின் மூட நம்பிக்கை பேச்சுக்களை தடுக்காத ஆசிரியர்கள் மத்தியில், அநீதியை தட்டிக் கேட்ட ஆசிரியர் சங்கருக்கு பாராட்டு.
சோசியல் மீடியாவில் பிரபலம் என்பதாலேயே ஒருவரை பேச அழைப்பது தவறு.
கல்வி நிலையங்களில். திரைப்பட விழாக்களை நடத்துவது மாணவர்களுக்கு கேடு. இதை தடுக்க வேண்டும்” என்று தெரிவித்து இருக்கிறார்.
வரவேற்கத்தக்க கருத்து.
அதோடு அவரது அறிக்கையில், “மகாவிஸ்ணுவை தட்டிக்கேட்ட ஆசிரியர் சங்கரை அதே பள்ளிக்கு தலைமை ஆசிரியராக்க வேண்டும்” என்கிறார்.
இது சினிமாவில் நடக்கலாம். ஏன், குறிப்பிட்ட நபரை திடீரென மாநிலத்துக்கே கல்வி அதிகாரியாக நியமிப்பதாக காட்சி அமைக்கலாம்.
எதார்த்தம் அதுவல்ல.
தலைமை ஆசிரியர் பொறுப்புக்கென்று, துறைத் தேர்வு உண்டு. அதுவும் சீனியாரிட்டிப்படியே அளிக்கப்படும்.
போகட்டும்..
தவிர, தனது அறிக்கையில் அமீர், “சக மனிதனை பிறப்பின் அடிப்படையில் தாழ்த்திப் பார்க்கின்ற சனாதன கருத்திற்கு எதிராக தமிழினம் விழித்துக் கொண்டு இருரக்கிறது. இப்படிப்பட்ட தமிழினத்தை ஆன்மீகம் என்கிற போர்வையில் “முற்பிறவி பாவங்கள்” என்ற சொல்லின் மூலம், வர்க்க ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் மீண்டும் ஒரு கும்பல் அடிமையாக்க முயற்சி செய்கிறது” என்கிறார்.
இதுவும் உண்மைதான். ஏற்கிறோம்.
ஆனால் இதைச் சொல்ல இயக்குநர் அமீருக்கு அருகதை இருக்கிறதா?
இந்து (சனாதன) மதத்தில் மறு பிறவி என்றால் இஸ்லாம் மதத்தில் மறுமை! அதையொட்டிய நம்பிக்கைகள், சடங்குகள்!
இப்படி இரு மதங்களிலும் மூடத்தனங்கள் இருக்கின்றன.
மகளிர் நிகழ்வு ஒன்றில், “ஆண்களைப் போல பெண்கள் ஆடை அணிவதால் ஆண்களாகிவிட முடியுமா… தன்னை கவர்ச்சியாக பெண்கள் வெளிப்படுத்திக் கொள்வது தவறு.. பிறகு எப்படி ஆண்கள் தவறு செய்யாமல் இருப்பார்கள்” என்கிற அர்த்தத்தில் பேசியவர்தான் அமீர்.
இதற்கு கூட்டத்திலேயே ஒரு பெண்மணி தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
உடனே அமீர் கூட்டத்தைவிட்டு வெளியேறினார்.
“கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதை தடுக்கக்கூடாது” என்று பேசியவர்தான் அமீர். ஆப்கன் பெண்களே, தலிபான்களை எதிர்த்து, “ஹிஜாப் எங்கள் பாரம்பரியமல்ல” என்று போராடினார்கள்.
ஆனால் அமீர், “ஹிஜாப்பை கழற்றச் சொன்னதால், என் மகள் நீட் தேர்வு எழுதாமல் திரும்பிவிட்டார்” என்றார்.
இப்படி தீவிர இஸ்லாமிய பற்றாளரான அமீர், “சனாதனம், இந்து மதம்” என்றெல்லாம் பேசும்போது, “பாத்தீங்களா, இஸ்லாமியர் ஒருவர் மதவெறியோடு இந்து மதத்தை விமர்சிக்கிறார்” என்று இந்து அடிப்படைவாதிகள் திசை திருப்புவார்கள்.  இது மத அடிப்படைவாத விவாதகமாக மாறும். தேவையற்ற சர்ச்சை ஏற்படும்.
தவிர இரு நாட்களுக்கு முன், இஸ்லாமியர் ஒருவர், சாலையில் சென்ற பிற மதப் பெண்களுக்கு புர்கா அணிவித்து போட்டோ எடுத்து காண்பித்து.. அதை யு டியுபிலும் வெளியிட்டு இருக்கிறார். இவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்த விசயம் குறித்து அமீர் ஏதும் பேசவில்லை. உலகில் எங்கு இஸ்லாமியர் பாதிக்கப்பட்டாலும் குரல் கொடுக்கும் அமீர், ஆப்கனில் மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படும் தலிபான்கள் செய்கை குறித்து ஏதும் பேசியதில்லை.
தவிர..
இந்து மத மூடத்தனங்களை விமர்சிக்க, எதிர்க்க ‘இந்துக்களிலேயே’ (நான் உட்பட) கோடிக்கணக்கானோர் உண்டு. நாத்திக அமைப்புகளே உண்டு.
அதற்காக, தான் சார்ந்த இஸ்லாமிய மூடத்தனங்களை அமீர் விமர்சிக்க வேண்டும் என நான் வலியுறுத்தவில்லை.
பிற மதங்களை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். எம் மதமமும் சம்மதமில்லை என்று ( என்னைப்போல்) கருத்து உடையவர், எந்த மதத்தையும் விமர்சிக்கலாம்.
குறிப்பிட்ட மதத்தின் தீவிர நம்பிக்கை கொண்டு, அடுத்த மத மூடத்தனங்களை மட்டும் விமர்சிப்பது, எதிர்மறை விளைவையே உண்டாக்கும்.
அமீர் இதை இப்போதாவது உணர வேண்டும்!
டி.வி.சோமுவின் குறிப்பிட்ட முகநூல் பதிவு:

Related Posts