உதயநிதி ‘ஏஞ்சல்’ பட வழக்கு: தயாரிப்பாளர் ராமசரவணன் பதில் அளிக்க உத்தரவு!

உதயநிதி ‘ஏஞ்சல்’ பட வழக்கு: தயாரிப்பாளர் ராமசரவணன் பதில் அளிக்க உத்தரவு!

தன்மீது தொடுக்கப்பட்ட வழக்கை நிராகரிக்க கோரி அமைச்சர் ( நடிகர்) உதயநிதி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராமசரவணனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.

பரத் நடித்த ‘நேபாளி’, ஷாம் நடித்த ‘ஏபிசிடி’ உள்ளிட்ட படங்களை ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக உருவாக்கியவர், தயாரிப்பாளர் ராமசரவணன். இவர், கடந்த 2018ல் ‘ஏஞ்சல்’ என்ற படத்தை துவங்கினார். தற்போதைய அமைச்சர் உதயநிதி, அப்போது தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்த காலம் அது. அப்போது உதயநிதியை தனது படத்துக்கு ஒப்பந்தம் செய்தார் ராமசரவணன்.

படப்பிடிப்பில் உதயநிதி – ஆனந்தி

கார்த்திக் நடித்த ‘தொட்டாசிணுங்கி’, பார்த்திபன் நடித்த ‘சொர்ணமுகி’, மாதவன் நடித்த ‘பிரியசகி’ உள்பட பல படங்களை இயக்கிய இயக்கிய, கே.எஸ்.அதியமான், ஏஞ்சல் திரைப்படத்தை இயக்கினார். படத்தில், கயல் ஆனந்தி, பாயல் ராஜ்புத், யோகிபாபு உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாயினர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், தயாரிப்பாளர் ராமசரவணன் பேசிய வீடியோ ஒன்று வைரலானது.

அதில் அவர், “எனது தயாரிப்பில் உதயநிதி நடித்த ஏஞ்சல் படப்பிடிப்பு எண்பது சதவிகிதம் முடிந்துவிட்டது. இன்னும் எட்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் படம் நிறைவடைந்து விடும். உதயநிதி நடிக்க மறுப்பதால் படம் தடைபட்டு உள்ளது. இதனால் 13 கோடி ரூபாய் செலவழித்து உள்ளேன். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது வட்டி இதர செலவுகளால் 25 கோடி ரூபாய் இழப்பு. இதை உதயநிதி ஈடுகட்ட வேண்டும்” என்று உருக்கமுடன் பேசி இருந்தார்.

படப்பிடிப்பில் கே.எஸ்.அதியமான்- உதயநிதி

படக்குழுவினர் தரப்பில், “இயக்குநர் கே.எஸ்.அதியமானிடம் படத்தின் கதை முழுவதையும் கேட்ட பிறகே, உதயநிதி இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதுவும் அப்போது உதயநிதி வசம் நான்கு படங்கள் இருந்து. ஆனாலும் இந்தப் படத்தின் கைதை பிடித்ததிருந்ததாலும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஏற்கெனவே தரமான – வெற்றிப் படங்களை அளித்தவர்கள் என்பதாலும் மகிழ்ச்சியுடனே நடிக்க ஒப்புக்கொண்டார்.

அடுத்த நாளே, பிஜு தீவு நாட்டுக்கு படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டோம். அங்கே தொடர்ச்சியாக 40 நாட்கள், எந்தப் பிரச்சினையும் இன்றி படப்பிடிப்பை நடத்தினோம். அங்கிருந்து சென்னை திரும்பிய பிறகு, உதயநிதி தன் கைவசம் உள்ள மீதிப் படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

படப்பிடிப்பில் உதயநிதி – ராமசரவணன்

அந்த நேரத்தில்தான் கொரோனா தொற்று பரவி, முழு அடைப்பு விடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் எந்த படப்பிடிப்பும் நடக்கவில்லை. அதன்பின் 2019ல், நாடாளுமன்ற தேர்தல் வந்தது. உதயநிதி தான் நடித்து வந்த படங்களை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்றுவிட்டார்.

ஏஞ்சல் பட போஸ்டர்

தேர்தல் முடிந்த பிறகு உதயநிதியிடம் மீண்டும் கால்ஷீட் கேட்டு தயாரிப்பாளர் ராமசரவணன் அணுகினார். இதற்காக உதயநிதி பட நிறுவனத்திற்கு நேரிலும், தொலைபேசியிலும், சமூக வலைதளத்திலுமாக பலமுறை தொடர்பு கொண்டு முயற்சி செய்தார்

ஆனால் உதயநிதி தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதைத் தொடர்ந்து, ‘மாமன்னன்’ படப்பிடிப்பு சேலத்தில் நடந்தபோது அங்கு இயக்குநரும், தயாரிப்பாளரும் நேரில் சென்று உதயநிதியை சந்திக்க முயற்சித்தனர்.

‘உதயநிதியின் ஹேர் டிரெஸ்ஸர் மற்றும் மேக்கப் மேன் இருவருக்கும் சம்பளம் செட்டில் செய்துவிட்டால், அவர் மீதமுள்ள ஷூட்டிங்கிற்கு வந்துவிடுவார்’ என தகவல் சொல்லப்பட, அந்த ஸ்பாட்டிலேயே உதயநிதியின் உதவியாளர்கள் இருவருக்கு முழு சம்பளத்தையும் செட்டில் செய்தார் தயாரிப்பாளர். ஆனாலும், அன்றுகூட தயாரிப்பாளரை சந்திப்பதையே உதயநிதி தவிர்த்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து உதயநிதியின் படங்கள் சில வெளியாகின. பிறகு, ‘மாமன்னன்’தான் தனது கடைசி படம் என்று கூறி, திரைத்துறையில் இருந்து ஒதுங்கிவிட்டதாக அறிவித்தார். மாநில அமைச்சராகவும் ஆகிவிட்டார்.

ராமசரவணன்

ஆனால் உண்மையில் மாமமன்ன் அவரது கடைசிப் படம் அல்ல.. ஏஞ்சல்தான் கடைசிப்படம். எட்டு நாள் மட்டும் உதயநிதியின் கால்ஷீட் கிடைத்தால் படத்தை முழுவதுமாக முடித்துவிடலாம். ஆனால் உதயநிதி ஏனோ அதைச் செய்யவில்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்தனர் படக்குழுவினர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் ராமசரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘ உதயநிதி நடிக்க, ஏஞ்சல் படத்தின் 80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இன்னும் எட்டு நாட்கள் அவர் கால்சீட் கொடுத்தால் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும். ஆனால் ஒப்பந்தத்தை மீறி, நடிக்க மறுக்கிறார் உதயநிதி. ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை அவர் நிறைவு செய்து தர வேண்டும். அதோடு, , காலதாமதத்திற்காக 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.

இதைத் தொடர்ந்து, தன் மீதான வழக்கை நிராகரிக்க வேண்டும் என உதயநிதி மனுத்தாக்கல் செய்தார். இவவழக்கு இன்று, நீதிபதி டீக்காராமன்,முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி டீக்காராமன், உதயநிதி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் ராமசரவணனுக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

Related Posts