தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ட்ரெய்லர் எப்படி?

தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ட்ரெய்லர் எப்படி?

தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பவர் பாண்டி, ராயன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தனுஸ் இயக்கும்  படம் இது. அவரது ஒண்டர்பார் நிறுவனமே தயாரித்துள்ளது. இப்படத்தினை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்தப் படத்தில் பாவிஷ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  ஒளிப்பதிவாளராக லியோ பிரிட்டோம், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

பிப்ரவரி 21-ல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் இப்படத்தின் ட்ரெய்லர்  வெளியாகியுள்ளது. சமகால காதலைப் பற்றி பேசும் படமாக இப்படம் இருக்கும் என்பதை ட்ரெய்லர் மூலம் அறிய முடிகிறது.

புதுமுகம் பாவிஷுக்கும் பிரியா பிரகாஷ் வாரியருக்கும் காதல் மலர்கிறது.  அதே நேரம் பாவிஷின் முன்னாள் காதலி அனிகா சுரேந்திரனுக்கு வேறொரு இளைஞனுடன் திருமணம் நிச்சியதார்த்தம் நடக்கிறது. இதை  பாவிஷால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  காதலுக்கும், காதல் தோல்விக்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்.

இதையெல்லாம் பார்க்கும்போது, இன்றைய இளைஞர்களின் காதல் வாழ்க்கையை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான முறையில் வெளிப்படுத்துகிறது ட்ரெய்லர்.

Related Posts