“தனஞ்செயன் தமிழ் சினிமாவின் என்சைக்ளோபீடியா..  பாரதிராஜா வாழ்க்கையை படமாக்குவோம்!”: தயாரிப்பாளர் டில்லி பாபு

“தனஞ்செயன்  தமிழ் சினிமாவின் என்சைக்ளோபீடியா..  பாரதிராஜா வாழ்க்கையை படமாக்குவோம்!”: தயாரிப்பாளர் டில்லி பாபு

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் பாரதிராஜா நடிக்கும்கள்வன்படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

 விழாவில், ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் டில்லி பாபு, “அம்மா கிரியேஷன்ஸ், சத்ய ஜோதி போன்ற பேனர்களுக்காகவே நான் போய் படங்கள் பார்த்த காலம் உண்டு. தனஞ்செயன் சார் தமிழ் சினிமாவின் என்சைக்ளோபீடியா.கிளைமாக்ஸ் காட்சிக்கு முந்தின நாள் யானக்கு மதம் பிடித்து விட்டது. அதற்காக சில காலம் காத்திருந்தோம். படம் சிறிய பட்ஜெட் என்றாலும் டெக்னீஷியன்ஸ் எல்லோருமே பெரியவர்கள் தான். பாலக்காட்டில் கிளைமாக்ஸ் ஷூட்டு ஒரு வாரத்திற்க்கு மட்டும் ஒன்றரை கோடி செலவானது.

பாரதிராஜா சார், ஜிவி பிரகாஷ், இவனா என எல்லாருமே சிறப்பாக நடித்துள்ள படம் வெற்றி அடைய வேண்டும்.

பாரதிராஜா சாரின் பயோபிக் உருவாகிறது என்றால் அதை வெற்றிமாறன் இயக்க வேண்டும் நாங்கள் தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம்என்றார்.

Related Posts