“சப்போர்ட் பண்ண விக்ரம் பிரபு!: அஞ்சலி நாயர் நெகிழ்ச்சி
“டாணாக்காரன் படத்தில் நடித்தபோது, நாயகன் விக்ரம் பிரபு, மிகுந்த உதவியாக இருந்தார்” என பட நாயகி அஞ்சலி நாயர் உருக்கமாக தெரிவித்து உள்ளார்.
ஜெய்பீம் படத்தில் போலீஸாக நடித்து கவனத்தை ஈர்த்தவர்,தமிழ். இவரது இயக்கத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர் நடித்த ‘டாணாக்காரன்’ படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
காவலர் பயிற்சியில் இருக்கும் இளைஞராக விக்ரம் பிரபு நடித்துள்ளார். மலையாள குணச்சித்திர நடிகர் லால் பயிற்சியாளராகவும் நடிக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் தமிழ் தெரிவித்தபோது, “காவலர் பயிற்சி பள்ளியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டு உள்ளது” என்றார்.
இயக்குனர் தமிழ் முன்னர் 10 ஆண்டுகள் காவலர் பணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தின் நாயகி அஞ்சலி நாயர், “படப்பிடிப்பின்போது, நாயகன் விக்ரம் பிரபு, மிகுந்த உதவியாக இருந்தார்” என உருக்கமாக தெரிவித்து உள்ளார்.