கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் கதையில் மிரட்ட வரும் உளவியல் திரில்லர் ‘வயலெட் கனவு’! – நாளை வெளியீடு!
கிரைம் நாவல் மன்னன் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை, திரைக்கதையில், இயக்குநர் பி.நித்தியானந்தம் இயக்கத்தில் உருவாகியுள்ள உளவியல் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் ‘வயலெட் கனவு’. அப்பு மூவிஸ் சார்பில் பாபு தூயவன் மற்றும் ஏ.முஸ்தரி இணைந்து தயாரித்துள்ள இப்படம் நாளை (நவம்பர் 20) திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தில் விவந்த் விவின் கதாநாயகனாகவும், ரெய்னா கரட் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜெகன் கல்யாண் இசையமைக்க, ஜி.கிதாகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கதைக்களம்: நாயகனுக்கு அடிக்கடி ஒரே மாதிரியான கனவு வருகிறது. அந்தக் கனவில் நடக்கும் சம்பவங்கள் நிஜத்திலும் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுகிறார். அதேசமயம் அவரைச் சுற்றி நடக்கும் மர்மச் சம்பவங்களின் பின்னணியில் இருப்பது யார்? என்பதே சீட் நுனியில் உட்கார வைக்கும் திக்.. திக்.. திருப்பங்கள் நிறைந்த கதை.
“ராஜேஷ்குமார் சாரின் நாவலைப் படிக்கும்போதே படம் பார்ப்பது போல இருக்கும். பெரிய மாற்றங்கள் இன்றி கமர்ஷியல் அம்சங்களுடன் இதை உருவாக்கியுள்ளோம்” என இயக்குநர் பி.நித்தியானந்தம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

