’பூமி’ படத்தின் கிளமேக்ஸ் பாடல் ரிலீஸ்!
சென்னை: ஜெயம் ரவியின் 25வது படம் பூமி. ரோமியோ ஜூலியட், போகன் படங்களை தொடர்ந்து இயக்குநர் லக்ஷ்மண் மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைந்திருக்கும் படம்தான் பூமி.
இந்த படம் விவசாயின் பிரச்னையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. ஜெயம் ரவிக்கு ஜோடியாக நாயகி நிதி அகர்வால் நடிக்கிறார். பூமி எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, இயக்குநர் லக்ஷமண், விளக்கம்;
விவசாயம் இல்லை என்றால் பூமியில் வாழும் மனிதன் நிலை என்னவாகும், விவசாயத்தின் முக்கியத்துவத்தை இந்த படத்தில் பர்க்கலாம் என்றார்.
இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் பாடல் ’வந்தே மாதரம்’ இன்று மாலை 7 மணிக்கு வெளியாக உள்ளது. தற்போது அந்த பாடல் வீடியோவின் முன்னோட்டம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.