‘பிரமோஷன், அட்டென்ஷன்,கலெக்க்ஷன்!’ : சினிமா தயாரிப்பாளர்களுக்கு, பிரபல பி.ஆர்.ஓ. நிகில் முக்கிய செய்தி!

‘பிரமோஷன், அட்டென்ஷன்,கலெக்க்ஷன்!’ : சினிமா தயாரிப்பாளர்களுக்கு, பிரபல பி.ஆர்.ஓ. நிகில் முக்கிய செய்தி!

கோடிகள் புரளும் திரை உலகில், போட்ட முதலீடு அப்படியே திரும்ப வர வேண்டுமென்றால், படம் மக்களிடம் அந்தப் படம், போய்ச் சேர வேண்டும். இந்த இடத்தில்தான் மக்கள் தொடர்பாளர்கள் எனப்படும் பி.ஆர்.ஒ.க்கள், படத்துக்கு முதுகெலும்பாய் இருக்கிறார்கள்.

படத்தின் பூஜை முதல் போஸ்டர் ரிலீஸ், தியேட்டர் வெற்றி விழா வரை ஓயாமல் தீயாய் வேலை செய்யும் பலரைத் தமிழ் சினிமா பார்த்திருக்கிறது. அப்படி, சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் தொடங்கி நேற்று முன்தினம் சினிமாவில் காலடி வைத்த புதுமுகம் வரை எல்லாரது போன் காண்டாக்ட்டிலும் பவரைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரே பெயர்… நிகில் முருகன்!

முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் திரையுலகின் டாப் ஹீரோக்களுக்குப் பி.ஆர்.ஒ.வாகவும், சிலருக்கு மேலாளராகவும் கலக்கி வருபவர்.  முழு எனர்ஜியுடன் நடிகராகவும் அவதாரம் எடுத்துதவர் நிகில்.

இவர், தமிழ், தெலுங்கு எனத் தென்னிந்தியத் திரையுலகம் முழுவதையும் தன் விரல் நுனியில் வைத்துள்ளார்.

600-வது படைக் கடந்து, இப்போது ஆயிரம் படங்களை நோக்கி அதே ராக்கெட் வேகத்துடன் பாய்ந்து கொண்டிருக்கிறது இவரது சினிமா பயணம்!

இந்த நிலையில், தனது அனுபவத்தில் இருந்து, ‘திரைப்பட பிரமோஷன் எங்கோ போகிறது?’ என்கிற தலைப்பில்,  சில முக்கிய செய்திகளை பகிர்ந்து உள்ளார்.

நிகில் முருகன் சொல்ல வருவது என்ன?

  • தேர்ந்தெடுக்கப்பட்ட அணுகல் முரண்பாடு: படத்தின் செய்திகள், பிரத்யேக காணொளிகள் (Shorts) மற்றும் விளம்பரங்கள் அனைத்து ஊடகங்களிலும், அனைத்து யூடியூப் சேனல்களிலும் வர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்கள். ஆனால், படக்குழுவினரை நேரில் சந்தித்துப் பேட்டி எடுக்கும் வாய்ப்பையோ அல்லது நிகழ்ச்சிக்குச் செல்லும் அனுமதியையோ ஒரு சில பெரிய ஊடகங்களுக்கு மட்டுமே Exclusive என வழங்குகிறார்கள். சிறிய மற்றும் நடுத்தர ஊடகங்களை ஒதுக்கிவிட்டு, பெரிய தளங்களை மட்டும் நம்பியிருப்பது எந்த அளவுக்குச் சரி என்ற கேள்வியை எழுப்புகிறார்.

  • Views-களும் கூட்டமும் வெற்றிக்கு உத்தரவாதமா?: கல்லூரிகளில் நடக்கும் இசை வெளியீட்டு விழாக்கள் அல்லது பிரம்மாண்ட நிகழ்வுகளில் கூடும் கூட்டமும், சமூக வலைதளங்களில் கிடைக்கும் வியூஸும், லைக்ஸும் மட்டுமே ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானித்துவிடாது. விழா மேடைகளில் கிடைக்கும் கைதட்டல்களும் ஆரவாரங்களும் நேராக தியேட்டர் கவுன்டரில் டிக்கெட் விற்பனையாக மாறுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

  • உள்ளடக்கத்தின் வலிமையே பிரதானம்: எத்தனை பிரம்மாண்டமான விளம்பர நிகழ்ச்சிகளை நடத்தினாலும், கல்லூரிகளுக்குச் சென்று நட்சத்திரங்களைக் காட்டி கூட்டத்தைக் கூட்டினாலும், திரையில் சொல்லப்படும் கதையும், அதன் களமும், கதாபாத்திரங்களும் மக்களைத் தொட்டால் மட்டுமே படம் வெற்றிபெறும்.

என்ன செய்ய வேண்டும்?

  • விளம்பர உத்திகளை மறுபரிசீலனை செய்தல்: இன்றைய டிஜிட்டல் விளம்பர முறைகள் மக்களைத் திரையரங்கிற்கு ஈர்க்கிறதா என்பதை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்பதே அவரது முதன்மையான நோக்கம்.

  • அனைத்து ஊடகங்களுக்கும் சம வாய்ப்பு: குறிப்பிட்ட சில ஊடகங்களை மட்டுமே நம்பியிராமல், சினிமாச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அனைத்து தளங்களையும் சமமாக மதிக்க வேண்டும் என்ற நியாயமான குரலைப் பதிவு செய்துள்ளார்.

  • பார்வையாளர்களின் உண்மையான ஈடுபாடு: வெறும் பிராண்ட் விழிப்புணர்வை (Awareness) உருவாக்குவதை விட, படத்தின் கதை மற்றும் நேர்மையான உள்ளடக்கத்தின் மூலமே மக்களின் உண்மையான ஆதரவைப் பெற முடியும் என்பதைப் புரியவைப்பது.

நீண்ட திரை அனுபவம் கொண்ட, நிகில் முருகன் கருத்து, திரையுலகில், நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புவோம்.

Related Posts