நடன மேடையிலிருந்து மெகா போனுக்கு! ராபின் இயக்கும் ‘வருத்துப் போக்கு’!
மலையாளத் திரையுலகில் தனது நடன அசைவுகளால் முத்திரை பதித்த நடன இயக்குனர் ராபின், இப்போது இயக்குனராக அவதாரம் எடுக்கிறார்! பாக்ஸ் மூவிஸ் சார்பில் மது தயாரிப்பில், வின்சி பிரான்சிஸ் திரைக்கதையில் உருவாகும் இந்தத் திரைப்படத்திற்கு ‘வருத்துப் போக்கு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
நட்சத்திரப் பட்டாளம்:
-
நாயகன்: சிபு
-
நாயகி: அனிஷா
-
முக்கிய வேடங்களில்: பணிக்கர், நெல்சன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள்.
-
ஒளிப்பதிவு: அம்ப்ரோஸ்

கதைக்களம்: காதலும்.. நட்பும்.. ஒரு எமோஷனல் பயணமும்!
படம் பற்றி இயக்குனர் ராபின் உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டவை:
“நாயகன் சிபு, தன் காதலி மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக வாழ்ந்து கொண்டிருப்பவன். திடீரென ஒரு நாள் அவனுக்குத் தீராத நோய் இருப்பது தெரியவர, ‘தான் இறந்துவிடுவோம்’ என்ற அச்சத்தில் யாரையும் காயப்படுத்த விரும்பாமல், ரகசியமாக மொரிசியஸ் நாட்டுக்குத் தப்பிச் செல்கிறான்.
காணாமல் போன நண்பனைத் தேடி அலைந்த நண்பர்களும் காதலியும், அவன் மொரிசியஸில் இருப்பதை அறிகிறார்கள். அங்கு அவனைச் சந்தித்தனரா? அவன் நோய் பாதிப்பிலிருந்து மீண்டானா? என்பதை நட்பும் காதலும் கலந்த உணர்ச்சிகரமான கதையாக சொல்லப் போகிறோம்!”

