பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்
இந்திய திரையுலகில் எத்தனையோ வாரிசுகள், எத்தனையோ குடும்பங்கள் சிக்ஸர் அடித்திருக்கின்றன. ஆனால், ஒரே ஆண்டில் தந்தையும் மகனும் பாக்ஸ் ஆபீஸை மொத்த குத்தகைக்கு எடுத்த மேஜிக்… இப்போதுதான் முதன்முறையாக நடந்திருக்கிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவியும், மெகா பவர் ஸ்டார் ராம்சரணும் இணைந்து இந்த ஆண்டைத் தங்களின் சொந்த ஆண்டாக மாற்றியுள்ளனர்.
முதலில் களமிறங்கிய தந்தை சிரஞ்சீவி, ‘மன சங்கர வர பிரசாத் காரு’ திரைப்படம் மூலம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய அதிரடியைக் கிளப்பினார். உலகம் முழுவதும் பல கோடிகளைக் குவித்து, இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படம் என்ற மாஸ் சாதனையைத் தன்வசப்படுத்தினார். திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டத்தோடு வசூல் மழையும் பொழிந்தது.
தந்தை அமைத்துக் கொடுத்த பாதையில், அடுத்த சில மாதங்களிலேயே புயலாக நுழைந்தார் மகன் ராம்சரண். புச்சி பாபு சனா இயக்கத்தில் வெளியான இவரது பிரம்மாண்டத் திரைப்படமான ‘பெத்தி’, தந்தையின் படத்தின் வசூல் சாதனையைத் தவுடுபொடியாக்கியது. தென்னிந்தியாவின் தற்போதைய பாக்ஸ் ஆபீஸ் சாம்பியனாக மகுடம் சூடியுள்ள இப்படம், அடுத்தடுத்த மைல்கற்களை நோக்கி அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது.
இந்த மெகா ஜோடியின் சாதனை வெறும் எண்களோடு நின்றுவிடவில்லை. கோடைக்காலத்தில் தியேட்டர்கள் வெறிச்சோடி, விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் சோர்ந்து போயிருந்த நேரத்தில், இந்தத் திரைப்படங்கள் தான் அவர்களுக்குப் புத்துயிர் கொடுத்தன. தியேட்டர் பிசினஸுக்குப் புதிய உத்வேகத்தைத் தந்து, ஒட்டுமொத்த சினிமா வர்த்தகத்தையும் நிமிரச் செய்துள்ளன.
ஒரே ஆண்டில், டாப் இரண்டு இடங்களை ஒரு தந்தை-மகன் கூட்டணி பிடிப்பது இந்திய திரையுலக வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை. மெகா குடும்பத்தின் இந்த பாக்ஸ் ஆபீஸ் சரித்திரம், சினிமா வரலாற்றில் நீண்ட காலத்திற்குப் பேசப்படும் காவிய அத்தியாயம்.

