உணர்வின் பிரதிபலிப்பு ’சியான்கள்’!

மிழ் சினிமாவின் அற்புதமான படங்களை எப்போதாவது தான்  நாம் பார்க்க முடியும் அந்த வரிசையில் ’சியான்கள்’ நம்முடைய வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கும் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்னையை அழகாக உணர்வில் பிரதிபலிப்பாக நம் முன் மண் வாசனையுடன் காட்சி படுத்தியிருக்கிறார்  படத்தின் இயக்குநர் வைகறை பாலன்.

சியான்கள் கதை என்ன?

கிராமிய மனம் கலந்த உணர்வின் பிரதிபலிப்பாக கதை நகர்கிறது.

இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பலம்பெரும் நடிகர் நளினிகாந்த் நடித்திருக்கிறார். அவருடன் சில முதியவர்களும் கதையின் நயாகர்களே!

தயாரிப்பாளரான  கரிகாலன் கதையின் நாயகனாக வருகிறார். இவர் மெடிக்கலில் வேலை செய்பவர். அந்த பிந்தங்கியிருக்கும் கிராமம் அவரை டாக்டராக கொண்டாடுகிறது.

அந்த கிராமத்தில் 7 ’சியான்கள்’ அதாவது முதியவர்களை சுற்றியே கதை பின்னப் பட்டிருக்கிறது. நளினிகாந்த் [சடையன்] இவர் ஒரு ஒண்டிக்கட்டை. பசுபதிராஜ் [மிலிட்டரி],  ஈஸ்வர் தியாகராஜன். செவ்வால (துரை  சுந்தரம் ) மணியாட்டி  (சமுத்திர சீனி) ரஷ்யா (சக்திவேல் ) செவனாண்டி ( நாராயணசாமி.) ஆகிய 7 சியான்கள்.

 இவரக்ளில் ஒருவர் மருமகளின் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்துகொள்கிறார். மற்றொருவர் சொத்துக்காக கொலைசெய்யப்படுகிறார்.  மீதி 5 நபர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இவர்களை சுற்றியே அன்பு,பாசம், வேடிக்கை, வெறுப்பு என கதை நகர்கிறது. முதியவர்களுக்கு நடக்கு கொடுமைகளை அம்பலப்படுத்தி, நம் பெற்றோரை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று நமக்கு புரியவைத்திருக்கிறார் இயக்குநர் வைகறை பாலன்.

தயாரிப்பாளர் கரிகாலன் மிகவும் இயல்பான கிராமிய முகம் கொண்ட நடிகராக அருமை.  முதலாளித்துவம் இல்லாத தயாரிப்பாளர் என்றே சொல்ல வேண்டும். கதையுடன் ஒன்றி காதல் காட்சிகளில் கூட நெருக்கம் காட்டாமல் காதலை அழகாக, அசைவம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்திய விதம் அருமை. கதையின் போக்கில்  கட்சிதமாக பொருந்திருக்கிறார். நாயகியாக ரிஷா ஹரிதாஸ் அளவோடு நடித்து வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்ல வெண்டும்.

முத்தமிழ் பின்னணி இசை,பாபுகுமார் ஒளிப்பதிவு, ரவீஸ் அரங்கமைப்பு, கதிரவன் ஆடைவடிவமைப்பு கட்சிதமாக பொருந்திருக்கிறது.

தனது பிள்ளைகளை வளர்பதற்காக தன்னை மெழுகாய் உருக்கி அவர்களுக்காக தனது அத்தனை ஆசைகளையும் புறம் தள்ளி வாழும் பெற்றோர்கள். அவர்கள் வளந்த பிறகு ஒதுக்கப்படும் பெற்றோரின் வலி, உணர்வுகள், ஆசைகள் அனைத்தையும் ஒரு கோர்வையாக காட்சிப்படுத்தி கண்முன் நிறுத்தியிருக்கிறார். முதியோர்களை பாதுகாப்பது சமூதாயத்தின் கடமை என  படத்தின் வழி பாடம் புகட்டியிருக்கும் இயக்குநர் வைகறை பாலனுக்கு சபாஷ்…

Related Posts