யோகி பாபுவின் ‘போட்’ ட்ரைலர்: ஒரு திகில் கடற் பயணம்!

யோகி பாபுவின் ‘போட்’ ட்ரைலர்: ஒரு திகில் கடற் பயணம்!

இயக்கிய முதல் படத்திலேயே அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர்களில்  ர் சிம்புதேவனும் ஒருவர். 2006ம் ஆண்டு நடிகர் வடிவேலு முதல் முறையாக நாயகனாக – இரட்டை வேடத்தில் –  தோன்றிய படம்,  ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’.

படத்தின்  திரைக்கதை, வசனம், இயக்கம் ரசிகர்களை கவரவே, சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.  தொடர்ந்து  சிம்புதேவன் இயக்கிய அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், புலி, கசட தபற உள்ளிட்ட பல படங்களும் ரசிகர்களை ஈர்த்தன.

இந்நிலையில் சிம்புதேவன்,  யோகி பாபு நாயகனாக நடிக்கும் போட் படத்தை இயக்கி வருகிறார். 80 வருடங்களுக்கு முன் – நாடு விடுதலை பெறுவதற்கு முந்தைய காலகட்டத்தில் – நடக்கும்படியான கதைக்களத்தைக் கொண்டது.

மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.  படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்து உள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஆகஸ்ட் 2ம் தேதி  திரைக்கு வருகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது.

ட்ரைலர் எப்படி இருக்கு:

1943ம் ஆண்டு..  உலகப்போர் காலகட்டம்…  ஜப்பான் நாடு  சென்னை மீது குண்டு வீசுகிறது… இதிலிருந்து தப்பி ஒரு படகில் சிலர் பயணிக்கின்றனர்..  படகை ஓட்டுபவர் யோகிபாபு.. ஒரு கட்டத்தில் அத்தனை பேரை படகு மூழ்கிவிடுமோ என்கிற நிலை.. பிறகு என்ன நடக்கிறது என்பதே படம் என்பதை டிரெய்லர் சொல்கிறது..  பரபரப்பான இந்த டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

Related Posts