’கேப்டன் மில்லர்’ பெங்களுக்கு ரிலீஸ்..!

’கேப்டன் மில்லர்’ பெங்களுக்கு ரிலீஸ்..!

தயாரிப்பு நிறுவனம் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும்கேப்டன் மில்லர்திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வரும் டிசம்பர் 15-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.  இந்த  படம்  2024ஆம் ஆண்டு  பொங்கலுக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இதே நாளில்  சிவகார்த்திகேயனின் ‘அயலான்’, ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’, சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’ ஆகிய படங்கள் வெளியாகின்றன. பா.ரஞ்சித் – விக்ரமின் ‘தங்கலான்’ ஜனவரி 26-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படங்களுடன் போட்டிபோட வருகிறது கேப்டன் மில்லர்.

Related Posts