கெய்ப் ( CAIB- Cinema at its best) விருதுகள் வழங்கும் விழா

கெய்ப் ( CAIB- Cinema at its best) விருதுகள் வழங்கும் விழா

பரம் சிவன் அருள் புரிய வந்து வந்து போவார். பத்தினிக்கு துயரம் வரும்  பழையபடி தீரும்”, என்ற கவிதையின் மூலம், சர்வதேசத் தரம் வாய்ந்த  திரைப்படங்கள் தமிழில் வரவில்லை என்ற கோபத்தைப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வெளிப்படுத்தியுள்ளதை அனைவரும் அறிவோம். வெறும் பொழுதுபோக்கு கருவி என்ற நிலை மாறி, திரைப்படங்கள் இன்று வரலாற்றையும், அரசியலையும்,  பண்பாடுகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி பதிவு செய்யும் அறிவார்ந்த தளமாக
மாறி உள்ளன. சர்வதேச அளவில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உலகை ஒரே குடும்பமாக இணைக்கின்றன. மறுபுறம் திரைத் தொழில் நுட்பங்களில் வரலாறு காணாத வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் திரைப்பட விருது வழங்கும்
விழாக்களில் மட்டும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. முன்னணி நட்சத்திரங்களை மேடையில் காட்டி கூட்டம் சேர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன..

இந்நிலையில்தான், தமிழில் சிறந்த திரைப்படங்கள், நடிகர்களை மட்டுமல்லாது தங்களது அறிவு, அனுபவம் மற்றும் கடும் உழைப்பால் திரைப்படங்களை உருவாக்கித்தரும் தொழில்நுட்பக் கலஞர்களுக்கும் விருது கொடுத்துப் பாராட்டி மக்களிடம் அறிமுகப் படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் கெய்ப் ( CAIB- Cinema at its best) விருதுகள் வழங்கும் விழா
தொடங்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக விருதுகள் வலைதளத்தில் மட்டும் அறிவிக்கப்பட்டு, கலைஞர்களின் இடத்திற்கே சென்று வழங்கப்பட்டன. இந்த ஆறாம் ஆண்டு தான் , முதல் முறையாக மேடையமைத்து விருதுகள் வழங்கப்படுகின்றன. எதிர்வரும் ஆண்டுகளில் , கலைஞர்கள் மற்றும் மக்களின் ஆதரவுடன் மேலும் விரிவான மேடையில் விருதுகள் வழங்க முயற்சி மேற்கொள்கிறோம்.

Related Posts