‘பாம்’: மிரட்ட வருகிறார் அர்ஜுன் தாஸ்!

‘பாம்’: மிரட்ட வருகிறார் அர்ஜுன் தாஸ்!

அறிமுகமான, கைதி திரைப்படத்திலேயே அதிரடி வில்லனாக கலக்கியவர், அர்ஜூன்தாஸ். பொதுவாக, வில்லன் நடிகர்களில் ஹீரோ மெட்டீரியலாக இருப்பவர்கள் குறைவு. ஆனால் அப்படியோர் திறமை அர்ஜூன்தாஸுக்கு உண்டு. அதனால்தான் கைதி படத்திலேயே அவரது வில்லத்தனத்தை மக்கள் ரசித்தார்கள்.தொடர்ந்து மாஸ்டர், விக்ரம், லியோ, விடா முயற்சி என அதிரடியாக முத்திரை பதித்தார்.

வில்லான மட்டுமல்ல… கதை நாயகனாகவும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை ரசவாதி படத்தில் நிரூபித்தார்.

இதோ… அவரது முத்திரை நடிப்பில் வரும் 12ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது, பாம் திரைப்படம்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். காளி வெங்கட், ஷிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி, சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.படத்தின் டீசர், டிரெய்லர், பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.

தவிர, முரட்டு வில்லனாக, சீரியஸான நாயகனாக (ரசவாதி) தோன்றிய அர்ஜூன் தாஸ், இந்தப் படத்தில், பயந்த சுபாவம் கொண்டவராக – பிறரிடம் அடி வாங்குபவராக – நடித்து இருக்கிறார். இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இயல்பான நடிப்பு, உணர்வுகளை வெளிப்படுத்தும் முகபாவம், ரசிக்கவைக்கும் உடல் மொழி, வித்தியாசமான குரல் என ப்ளஸ்களைக் கொண்ட அர்ஜூன்தாஸின் நடிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.