“தகுதி கிடையாதுடா!”: பா.ரஞ்சித்தின் ‘நீல நட்சத்திர’ அதிரடி!

 “தகுதி கிடையாதுடா!”: பா.ரஞ்சித்தின் ‘நீல நட்சத்திர’ அதிரடி!

பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, ஜெயகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.எப்படி இருக்கிறது டிரெய்லர்?

அசோக் செல்வன், சாந்தனு இருவருக்கும் இடையேயான மோதலுடன் தொடங்கும் இந்த ட்ரெய்லர், இறுதியாக அடையாள அரசியலை அழுத்தமாக பேசுவதாக உருவாகியுள்ளது. இன்னொரு பக்கம் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் காதல் காட்சிகளும் உள்ளன.

அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் இருவரும் ப்ளூ ஸ்டார் படத்தின் ஷூட்டிங்கின் போது தான் காதலிக்கத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிந்த் வசந்தா இசையில் ‘ரயிலின் ஒலிகள்’ என்ற பாடல் ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியாகி ஹிட் ஆனது. இப்போது ட்ரெய்லரிலும் ‘ரயிலின் ஒலிகள்’ பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்தப் படத்தில் அசோக் செல்வன் கேரக்டர் பெயர் ரஞ்சித் என வைக்கப்பட்டுள்ளது. பா ரஞ்சித்தை நினைவு கூறும் விதமாக இயக்குநர் இந்த பெயரை அசோக் செல்வன் கேரக்டருக்கு கொடுத்துள்ளதும் கவனம் ஈர்த்துள்ளது.

ஜனவரி 25ம் தேதி வெளியாகும் ப்ளூ ஸ்டார் ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை.

 

 

Related Posts