பிறந்தநாள் பரிசு..! ட்விட்டரில் பாடல் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்திய நடிகை
சென்னை: ஆகஸ்ட்1ஆம் தேதியான இன்று நடிகை இந்துஜா தனது 26வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசா தான் நடிச்ச படத்திலிருந்து ஒரு பாடலை ட்விட்டர்ல ரிலீஸ் பண்ணிருக்காங்க. நடிகை இந்துஜா நடிகர் விக்ரமன் மகன் துருவ் உடன் ஒரு பாடத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
அவர் ஏற்கனவே நடித்திருந்த படத்திலுருந்து மெலடி சாங் ஒன்றை தனது ட்விட்டரில் வெளியிட்டு ரசிகர்களுக்கு பரிசு கொடுத்திருக்கிறார் இந்துஜா.
இன்று மாலை 5 மணிக்கு இந்துஜா தன்னோட ட்விட்டர் பக்கத்தில இந்த பாட்டையை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தின் ஆடியோ ரைட்ஸ்யை Zee மியூசிக் சவுத்வாங்கியிருக்கிறது. இந்தப் பாடலை ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடியிருக்கிறார். இவர் ஏற்கனவே பிதாமகன் படத்தில் இளங்காற்று வீசுதே,’ மற்றும் தங்க மீன்கள் படத்தில் ஆனந்த யாழை மீட்டுகிறாள் என்ற மெலடி சாங் அனைவரிடத்திலும் பாராட்டப்பட்டது குறிப்பிடதக்கது.
இந்த படத்தின் பாட்டு முழுக்க முழுக்க சென்னையில் படமாக்கப்பட்டது. இந்தப் படத்தை எழுதி டைரக்ட் பண்ணயது ஏ.கே. மியூசிக், திவாகரா தியாகராஜன். வேலூரைச் சேர்ந்த இந்துஜா பில்லாபாண்டி, மேயாதமான், மெர்க்குரி, பூமராங் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நடிகர் விஜயின் 63வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது பிறந்த நாளான இன்று பாட்டு ரிலீஸ் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது. மற்றும் திரைபிரபலங்கள் பலர் இந்துஜாவுக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறிவருகின்றனர்.
யாழினி சோமு