போகி: திரைப்பட விமர்சனம்

போகி: திரைப்பட விமர்சனம்

கிளைமாக்ஸில் ஒரு பெண் கதாபாத்திரம் காவல் துறையினரிடம், “பெண்களை பாலியல் ரீதியாக கொடுமைப் படுத்துபவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதால் என்ன பயன்… சிறையில் ஜாலியாக பொழுதைக் கழிப்பார்கள்.. பிறகு ஜாமீனில் வெளிவந்துவிடுவார்கள்.. குற்றம் நிரூபிக்கப்படுமா, தண்டனை கிடைக்குமா என்பது உறுதி இல்லை. மீண்டும் இதே வேலையைச் செய்வார்கள்.. இவர்களுக்கு நீங்களே தண்டனை கொடுங்கள்” என்பதுதான் படத்தின் மையக்கரு.

ரகசிய கேமாராக்கள் மூலம் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அதை வைத்து கோடி கோடியாக சம்பாதிக்கிறது ஒரு கும்பல். இவர்களைப் பிடிக்கும் முயற்சியில் ஒரு காவல் குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், அதே கும்பலை நாயகனும் அவனது நண்பனும் சேர்ந்து கொலை செய்கிறார்கள். இதற்கிடையே, நாயகன் சிறுவயதில் பிரிந்து சென்ற காதலியை மீண்டும் சந்திக்கிறான். ஆனாலும் தனது காதலை வெளிப்படுத்தாமல், கொடூரர்களை கொலை செய்வதில் தீவிரம் காட்டுகிறான்.

அவனது முடிவுக்குக் காரணம் என்ன… காமக் கொடூரர்களை போலீஸ் பிடித்ததா என்பதுதான் கதை.

நாயகனாக நடித்திருக்கும் நபி நந்திக்கு இதுதான் முதல் படம். ஆனாலும் முடிந்தவரை இயல்பாக நடிக்க முயற்சி செய்து இருக்கிறார். தங்கை மீது வெளிப்படுத்தும் பாசம், அவளுக்கு ஆபத்து என்றவுடன் காண்பிக்கும் ஆவேசம் என கவனம் ஈர்க்கிறார்.

அவரது தங்கையாக, நடித்து இருக்கிறார் ‘லப்பர் பந்து’ படப்புகழ் சுவாசிகா. பல பிரச்சினைகளைக் கடந்து வாழ்வில் முன்னேறும் பழங்கு பெண்ணாக – சிறப்பாக — நடித்து இருக்கிறார். தனக்கு ஏற்படும் பாதிப்பை நினைத்து மருகும் காட்சிகளில் பரிதாபப்பட வைக்கிறார்.

நாயகனின் நண்பனாக வரும் சரத், ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிக்கவைக்கும் பூனம் காவுர், காவல்துறை அதிகாரியாக வரும்ம் வேல ராமமூர்த்தி, கொடூர வில்லனாக வரும் நான் கடவுள் ராஜேந்திரன், ஓரிரு காட்சிகள் மட்டும் வந்தாலும் சிரிக்க வைக்கும் எம்.எஸ்.பாஸ்கர், சங்கிலி முருகன், ‘பிச்சைசக்காரன்’ கார்த்தி உள்ளிட்ட அனைவரும் பார்த்திரம் அறிந்து நடிப்பை அளித்து உள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ராஜா சி.சேகர் வெவ்வேறு காலக்கட்டத்தில் நடக்கும் சம்பவங்களை சிறப்பாக அளித்து இருக்கிறார். பாடல் காட்சிகளில் கூடுதலாக ரசிக்க வைக்கிறார்.

மரியா மனோகர் இசையில், சினேகனின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் சிறப்பு.சுரேஷ் அர்ஸின் எடிட்டிங், அன்பறிவ் சண்டைப் பயிற்சி ஆகியவை படத்துக்கு பலம்.

எழுதி இயக்கியிருக்கும் விஜயசேகரன்.எஸ் சுவாரஸ்யமான த்ரில்லரை அளித்திருப்பதோடு, அதில் சமூக பிரச்சனையையும், பழங்குடி இன மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையையும் பதிவு செய்து இருக்கிறார்.

அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

 

ரேட்டிங் 2.7/5

Related Posts