குழந்தை இரவு தூக்கம் எச்சரிக்கை..!
குழந்தை வளர்ப்பு என்பது எளிதான காரியம் இல்லை. பெரியவர்கள் உடன் இல்லாத சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன இந்த கால குழந்தைகள். பெரும்பாலான பெற்றோருக்கு சவாலாக இருக்கிறது குழந்தை வளர்ப்பு. குழந்தைகளின் பிரச்சனைகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மருத்துவர். சதீஷ்
குழந்தைக்கு சின்னதாக உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி விடுகின்றனர் பெற்றோர். பொதுவாக ஏற்படக்கூடிய உடல்நலக் குறைவு எளிதில் தெரிந்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆனால் சிலவகை உடல்பாதிப்பு வெளியில் தெரிவதில்லை. அதில் ஒன்று தான் தூக்கமின்மை.
குழந்தை தூங்குவதை நாம் நுண்ணிப்பாக கவனிக்க வேண்டும். முறையான தூக்கம், இயல்பாக தூங்குகிறதா என்பதை கன்கானிக்க வேண்டும். அவ்வாறு கவனிக்கவிட்டால் தூக்கமின்மையை ஏற்படுத்தும்.
தூக்கமின்மை அறிகுறிகள்;
தூங்குவதில் தாமதம், நள்ளிரவில் எழுந்திருத்தல், படுக்கை ஈரமாக்குதல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இந்தக் கால சூழ்நிலையில் 30% குழந்தைகள் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த ஆய்வின் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், குழந்தைகளின் தூக்கத்தை கவனிப்பது பெற்றோர் ஆகிய உங்களது கடமையாகும்.
பகல் நேரத்தூக்கம்;
பகல் நேரத்தில் அதிகப்படியான தூக்கம் என்பது தூக்கக் கோளாறின் அறிகுறியாகவும் இருக்கலாம். காய்ச்சல் அல்லது உடல் சேர்வு காரணமாக சில நேரங்களில் பகல் தூக்கம் அவசியம். ஆனால் குழந்தை அடிக்கடி பகல் நேரத்தில் தூங்கினால் அது கவனிக்கப் படவேண்டிய பிரச்சனையாகும்.
கனவுகள்;
பெரியவர்களுக்கு கனவு வருவது போன்றே குழந்தைகளுக்கும் கனவுகள் வருவதுண்டு. அந்த சமயத்தில் குழந்தை பயந்து எழுந்திருக்கலாம். அந்த பயத்தின் காரணமாக மீண்டும் தூங்க முடியாமல் போகலாம்.
குழந்தைகளுக்கு கனவுகள் வருவது இயல்பானவை. ஆனால் அடிக்கடி வந்தால் தூக்கமின்மையின் அறிகுறியாகும். சரியான தூக்கம் இல்லையென்றால் குழந்தையின் உடல்நலத்தில் பிரச்சனை ஏற்படுத்தும்.
ஏதோ ஒரு பாதிப்பால் மனஅழுத்தம் ஏற்பட்டு, அதன் காரணமாக தூக்கம் வராமல் இருக்கலாம். இரவில் நீண்ட நேரம் விழித்துக் கொண்டு இருப்பதை தவிருங்கள். செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதன் பாதிப்பாலும் கனவுகள் வந்து தூங்க விடாமல் தொந்தரவு செய்யலாம்.
குழந்தை குறட்டை;
சில குழந்தைகளுக்கு சளி பிரச்சனையால் நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டு குறட்டை ஏற்படலாம். மூக்கடைப்பு, சுவாச நோய்த்தொற்று, விரிவாக்கப்பட்ட டான்சில்ஸ் ஆகியவை குழந்தைகள் குறட்டை விடுவதற்கான காரணங்கள்.
ஒரு சிலருக்கு தினசரி குறட்டை Obstructive Sleep Apnea (OSA ) என்னும் காரணமாக இருக்கலாம். சுமார் 3% குழந்தைகளுக்கு ஓஎஸ்ஏ இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தை தூக்கத்தில் இருந்து திடீரென்று எழுந்து அலறுவது மூச்சு வாங்குதல், வியர்வை, தசை பதற்றம் ஆகிய பிரச்சனை ஏற்படலாம். 5 குழந்தைகளில் ஒருவர் இந்தப் பாதிப்புக்கு உள்ளாவதாக கூறுகின்றனர்.
தூங்கும் போது சிறுநீர் கழிப்பது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் என்றால் இயல்பானது. இது பெரிய பிரச்சனை கிடையாது. அதுவே 3-4 தடவைகளுக்கு மேல் சிறுநீர் கழித்தால் அது தூக்கமின்மையின் அறிகுறியாகும்.
உங்கள் குழந்தை அரை தூக்கத்தில் நடப்பது,பேசுவது இயல்பு அதுவே அடிக்கடி என்றால் பிரச்சனை உடனடியாக மருத்துவரை பார்ப்பது அவசியமாகும்.
எஸ்.யாழினி