மிஷ்கின் வைத்த  கோரிக்கை!: ஆர்யன் ஷ்யாம் தகவல்!

ஏவியஎம் சரவணனின் பேத்தியான அபர்ணாவை திருமணம் செய்துகொண்டவர், ஆர்யன் ஷியாம். தற்போது அவர், ‘அந்த நாள்’ என்ற படத்தை தயாரித்து நடித்து உள்ளார். நாயகிகளாக  ஆத்யா, லீமா பாபு ஆகியோர் நடிக்க இமான் அண்ணாச்சி முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.

 வி.வி., படத்தை இயக்கி உள்ளார்.

விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.

இதற்கிடையே, தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட, திருப்பதி வெங்கடாஜலபதி புராண வரலாற்றிலும் ஆர்யன் நடித்தார்.

இந்த நிலையில், தனது அந்தநாள் படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் ஆர்யன் தெரிவித்ததாவது:

“‘மிஷ்கின் இயக்கத்தில் நான் நடிப்பதாக இருந்தது. அதற்காக அவருக்கு ஒரு கோடி ரூபாய், முன்பணம் அளித்தேன்.  ஆனால் பட உருவாக்கம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. எனது படம் துவங்கப்படுவதாக இல்லை. அவர் அட்வான்ஸ் தொகையையும் திரும்பத் தரவில்லை.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து எனது ஆதங்கத்தைத் தெரிவித்தேன்.

தற்போது தான் வாங்கிய அட்வான்ஸ் தொகையை மிஷ்கின் திரும்ப அளித்துவிட்டார். தவிர அவரது சார்பில், ‘மிஷ்கின் அட்வான்ஸ் பணத்தை திருப்பித் தரவில்லை என மீடியாவில் நீங்கள் கூறியதால் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டு விட்டது. ஆகவே அட்வான்ஸ் தொகையை திருப்பி அளித்ததையும் மீடியாவை அழைத்துச் சொல்லுங்கள் என்று கூறப்பட்டது.

ஆகவேதான் இந்தத் தகவலை சொல்கிறேன்” என்றார்.

Related Posts