‘அறிவு’: ‘உறியடி’ விஜய்குமார் – ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் புதிய பட பூஜை!
மூவிட்ரான் புரொடக்ஷன் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக, சாய்வினோத் ஜெயக்குமார் பிரம்மாண்டமாக தயாரிக்கும் திரைப்படம் “அறிவு”.
‘கழுகு’ படத்தின் மூலம் முத்திரை பதித்த சத்யசிவா இயக்கும் இப்படத்தில், எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட ‘உறியடி’ விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி முதல்முறையாக ஜோடி சேருகிறார்கள்.
பெண் உரிமைகளை மையமாக வைத்து, சமூகத்திற்குத் தேவையான ஒரு மிக வலுவான செய்தியை, செம விறுவிறுப்பான ஆக்ஷன் கலந்த சினிமா மொழியில் சொல்லத் தயாராகிவிட்டார் சத்யசிவா.
இசை அசுரன் டி. இமான் மெலடியிலும் மாஸிலும் மிரட்ட காத்திருக்க, தில் ராஜுவின் ஒளிப்பதிவில் இடுக்கி, தேனி மற்றும் சென்னை எனப் பல லொகேஷன்களில் படத்தின் காட்சிகள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட உள்ளன.
ஐ.எம். விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே களம் இறங்குகிறது. “இப்படத்தில், சமூகப் பொறுப்புணர்வும் விறுவிறுப்பும் சரிபாதியாகக் கலந்து இருக்கும். மண் வாசனை மாறாத இயற்கை அழகும், நகரத்து நிஜங்களும் பின்னிப் பிணைந்த ஒரு தரமான படைப்பாக “அறிவு” தமிழ் சினிமாவில் ஒரு புதிய அலையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!
இப்படத்தின் பூஜை இனிதே இன்று நடந்தேறியது.
