மராட்டியம்: சரத்பவார் எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க மனு தாக்கல்!

மராட்டியம்: சரத்பவார் எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க மனு தாக்கல்!

மகராஷ்டிராவில், சரத்பவார் தலைமையில் கட்சி செயல்படுகிறது. இந்நிலையில்அவரது உறவினரான அஜித்பவார், கடந்த ஜூலை மாதம் அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்களுடன் ஆளும் சிவசேனை-பா.ஜ.க. கூட்டணி அரசில் இணைந்தார்.  இரு தரப்பினரும் அறிக்கைப் போரில் இறங்கினர்.

ஆனால்,  சில நாட்களுக்கு முன்பு சரத்பவார் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும், அஜித் பவார் தலைமையிலான கோஷ்டியைச் சேர்ந்தவர்களும் தேசியவாத காங்கிரஸில் பிளவு ஏதும் இல்லை என்றனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக அஜித் பவார் தேர்ந்தெடுக்கப்பட்டதாக,  அவரது தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அக்டோபர் 6 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இருதரப்பினரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் அலுவலகத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பிரிவு தரப்பினர், சரத்பவார் பிரிவு எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இன்னும் சில எம்.எல்.ஏ.க்கள் சரத்பவார் முகாமை ஆதரிப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது மகராஷ்டிர அரசியலில்ல பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Related Posts