“மாளிகையில் பிச்சைக்காரன்…” : கவினின் ‘ப்ளடி பெக்கர்’ ட்ரெய்லர்!

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரி சிவபாலன் இயக்கி வரும் ‘ப்ளடி பெக்கர்’ படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்சயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு இன்று (அக் 10) வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் கவின் பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்திருக்கிறார்.இந்த படத்தின் டீசர் இந்த மாதம் அக்.7 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இன்று அந்த படத்தின் இந்த ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில் பிச்சைக்காரனாக நடைக்கும் கவின் ஒரு அரண்மனைக்குள் சென்றுவிடுகிறார். அங்கு அவரை வேறு ஒரு நபராக மாற்றி விடுகின்றனர்.
ட்ரெய்லர் எப்படி?
அழுக்குப் படிந்த கிழிந்த உடை, நீண்டு கிடக்கும் தாடி, தலைமுடி, அதனை நியாயம் சேர்க்கும் நடிப்பில் கவர்கிறார் கவின். “காலங்காத்தால வேலைக்கு போறதுக்கு ரெடியாகுற மாதிரி பிச்சை எடுக்க ரெடியாகுறானுங்க” என்ற வசனத்துக்கு ஏற்பட ரெடியாகி, சேட்டைகள் செய்கிறார் கவின்.
திடீரென அவருக்கு ஒரு ஜாக்பாட் அடிக்கிறது. பணக்கார வீட்டில் சென்று நடிக்க வேண்டும். அதற்காக மீண்டும் ஒரு கெட்டப் மாற்றம். அந்த வீட்டில் நடக்கும் கலகலப்பான த்ரில்லிங் அனுபவம் தான் படமாக இருக்கும் என்பதை மொத்த ட்ரெய்லரும் உரித்து காட்டுகிறது. நெல்சனின் உதவி இயக்குநர் அவரைப் போன்ற ஒரு ஜாலியான கிட்டத்தட்ட ‘டாக்டர்’ படத்தையொட்டிய கதைக்களத்தை உருவாக்கியிருப்பார் எனத் தெரிகிறது. படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.