சிம்பு பிறந்தநாள்… போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய கமல்!

சிம்பு பிறந்தநாள்… போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய கமல்!

சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் (STR 48) அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க,  நடிகர் கமல்ஹாசன்  தயாரிக்கிறார்.

 

‘ரூ.100 கோடி பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாக இருக்கிறது.. சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்..  முற்றிலும் வித்தியாசமான இருவேடங்களில் சிம்பு நடிக்கிறார்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்’ என தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

இந்தப் படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ், குதிரையேற்றம் உள்ளிட்ட பல பயிற்சிகளை வெளிநாட்டில் மேற்கொண்டு வந்த சிம்பு, தற்போது சென்னை திரும்பி இருக்கிறார்.

நாளைய தினம் சிம்புவின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, கமல்ஹாசன் நடிகர் சிம்புவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “அன்புத் தம்பி சிலம்பரசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.” என தெரிவித்துள்ளார். இந்த பதிவினை ராஜ்கமல் நிறுவனம் ஷேர் செய்து, “வீரத்தை கட்டவிழ்த்துவிட்டு, சிம்பு 48 படத்தின் அற்புதமான பயணத்திற்கு சாட்சியாக இருங்கள். பிறந்தநாள் வாழ்த்துகள் சிலம்பரசன்” என பகிர்ந்துள்ளது.

இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து உள்ளது.

Related Posts