ஆண் பாவம் பொல்லாதது: திரை விமர்சனம்
Drumsticks Productions தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் உருவாக்கத்தில், ரியோ ராஜ் – மாளவிகா மனோஜ் ஜோடியாக நடித்துள்ள படம் `ஆண் பாவம் பொல்லாதது’.
புதுமணத் தம்பதிகளிடையே நடக்கும் ஈகோ மோதலையும் அதற்கான தீர்வையும் ஜாலியாகச் சொல்லி இருக்கிறது படம்.
இந்தக் காலத்து மார்டன் கேர்ள், மாளவிகா. அவருக்கும் ஐடி ஊழியரான ரியோவுக்கும் திருமணம் அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.
ரியோ சிறப்பாக நடித்து உள்ளார். மனைவியிடம் காட்டும் காதல்.. அவரது ஈகோவால் அடையும் அதிர்ச்சி. குறிப்பாக நீதிமன்ற காட்சியில் வசனங்கள் இல்லாமையே வெளிப்படுத்தும் அழுத்தமான நடிப்பு.. சிறப்பு!
நாயகி மாளவிகா மனோஜும் அருமையாக நடித்து இருக்கிறார். ஜோ படத்தில் அமைதியா வந்து எல்லோரையும் கவர்ந்தார். இந்தப் படத்தில் அதிரடி மார்டர்ன் கேர்ள் ஆக வந்து அசத்துகிறார். அவர் பேசும் தொணி, கெத்து காட்டும் தெனாவெட்டு எல்லாமே ரசிக்க வைக்கின்றன.
ஆர்ஜே விக்னேஷ்காந்துக்கும் இது முக்கியமான படம். வழக்கறிஞராக வருகிறார். ஆரம்பத்தில் நகைச்சுவை கதாபாத்திரம் போல் வருகிறார். ஆனால் இடைவேளைக்குப் பிறகு அசத்தலான கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். முக்கியமாக, கோர்ட் காட்சிகளில் அசத்தல்.
சித்துகுமார் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் ஈர்க்கிறது.
மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு சிறப்பு. குறிப்பாக பாடல் காட்சிகளில் கூடுதலாக ஈர்க்கிறார்.
கே.ஜி. வருணின் எடிட்டிங் கச்சிதம்.
பெண்களின் பிரச்சினைகள், சிக்கல்களைச் சொல்ல ஆயிரமாயிரம் படங்கள் வருகின்றன. அதே நேரம் ஆண்களின் துயரங்களை வெளிப்படுத்தும் படமாக, ஆண் பாவம் பொல்லாதது வந்திருக்கிறது.
ஆண்களின் பாவப்பட்ட மனநிலையை, ஜாலியாக ரசிக்கும்படி சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல்.
அனைவரும் ரசித்துப் பார்க்கலாம்.
ரேட்டிங்: 3.8/5

