‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த அதிரடி!
அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஐ அம் புத்தா புரொடக்ஷன்ஸ் எனும் இரண்டு நிறுவனங்களும் இணைந்து ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தினை வழங்கின.
1990களில் காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை கதைக்களமாக் கொண்ட திரைப்படம் இது.
கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டாலும், நேர்த்தியான சினிமா என்ற பாராட்டையும் பெற்றது.
250 கோடி ரூபாய் வசூலித்து ‘வசூல் கிளப்’பில் இணைந்தது ‘ தி காஷ்மீர் ஃபைல்ஸ்’.
தற்போது அதே தயாரிப்பு நிறுவனங்கள் இரண்டும் இணைந்து அடுத்தடுத்த படைப்புகளை உருவாக்க இருக்கின்றன.
இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் மற்றும் நடிகை பல்லவி ஜோஷி ஆகியோர் இதன் மூன்று பாகங்களையும் நிறைவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேஜ் நாராயன் அகர்வால் வழங்க, அபிஷேக் அகர்வால், விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி மற்றும் பல்லவி ஜோஷி ஆகியோர் இந்த இரண்டு படங்களையும் தயாரிக்கின்றனர். தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

