ஷார்ட் ஃபிலிம் டூ பிக் ஸ்கிரீன்! ‘பிளாக் கோல்டு’ அஜித் விக்னேஷ் அடுத்கட்ட பாய்ச்சல்!
மதுரையைச் சேர்ந்த இளம் நடிகர் அஜித் விக்னேஷ், சென்னை ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் கல்வி பயின்றவர், கல்லூரிப் பருவத்தில் இருந்தே சினிமா மீது தீராத ஆர்வம் கொண்டுள்ளார்; இதற்காகச் சென்னைக்கு வந்து தனது லட்சியப் பயணத்தைத் தொடங்கிய அவர், நடிப்போடு நின்றுவிடாமல் சிலம்பம், பாக்ஸிங் போன்ற தற்காப்புக் கலைகளிலும் முறையான பயிற்சி பெற்றுள்ளார்.
திரைத்துறையில் ஆரம்பத்தில் கிடைத்த சின்னச்சின்ன வாய்ப்புகளைத் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டு கடினமாக உழைத்த அவர், இதுவரை 40 முதல் 50-க்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்து தனது திறமையை மெருகேற்றிக் கொண்டுள்ளார்.
இந்தக் குறும்பட அனுபவமே அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததுடன், மறைந்த பழம்பெரும் நடிகர் விவேக் அவர்களின் அன்பைப் பெற்றுத் தந்தது; அஜித் விக்னேஷின் நடிப்பாற்றலைக் கண்டு வியந்து பாராட்டிய விவேக் மூலமாகவே தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படத்தில் நடிக்கும் பொன்னான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
‘பிகில்’ படப்பிடிப்பின் போது அவரது நடிப்பை நேரில் பார்த்துப் பாராட்டிய முன்னணி இயக்குநர் வெற்றிமாறனின் ஊக்கமளிக்கும் வார்த்தைகள், தன்னம்பிக்கையை இரட்டிப்பாக்கியதாக அவர் பெருமிதத்துடன் கூறுகிறார். அதனைத் தொடர்ந்து ‘தமிழ் ராக்கர்ஸ்’ போன்ற பிரபல வெப் தொடர்களிலும் முத்திரைப் பதித்த அவர், தற்போது வெளியாகியுள்ள ‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தில் வில்லனாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களையும் திரையுலகப் பிரபலங்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
இப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ள அவர், தற்போது பல்வேறு சவாலான கதைகளைக் கையில் எடுத்துள்ளார். வில்லனாகத் தனது திறமையை ஆழமாகப் பதிவு செய்துள்ளார்.
அடுத்தகட்டமாக இரண்டு புதிய திரைப்படங்களில் கதாநாயகனாக அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தமாகியுள்ளார்; அந்தப் படங்கள் குறித்த மாஸான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த விதமான சினிமா பின்னணியும் இல்லாமல், தனது அசுர விடாமுயற்சி, திறமை மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான ராஜபாட்டையை அமைத்து வரும் அஜித் விக்னேஷின் இந்த எழுச்சிமிகு சினிமா பயணம் இளம் தலைமுறைக்கேயான மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது!

