மூக்குத்தி அம்மன் 2 : விமர்சனம்: வரமா, சாபமா?

மூக்குத்தி அம்மன் 2 : விமர்சனம்: வரமா, சாபமா?

டிஜிட்டல் புராணம்:

சென்னையில் சாதாரண போலீஸாக இருக்கும் நயன்தாராவின் கனவில், “மயிலாஞ்சிக்கு போ” என உருவங்கள் அழைக்கின்றன. இன்னொரு பக்கம், நிதின் சத்யா செய்யப் பார்த்த நரபலியைத் தனியாளாகத் தடுத்து ஒரு சிறுமியைக் காப்பாற்றுகிறார். இதனால் பெரிய புரமோஷன் கிடைக்கும் வாய்ப்பிருந்தும், அதை விட்டுவிட்டுக் கனவில் வந்த மயிலாஞ்சி ஊருக்கே டிரான்ஸ்ஃபர் வாங்கிச் செல்கிறார்.

2000 ஆண்டுகளுக்கு முன் தவறு நேர்ந்ததாகக் கூறித் தனது அவதாரத்தை முடித்த மூக்குத்தி அம்மன் மீண்டும் வந்தாரா? மம்மி போல உயிர்த்தெழும் ரெஜினா கசாண்ட்ரா, தன் காதலன் துனியா விஜய்யுடன் சேர்ந்து நயன்தாராவை அழிக்கப் போடும் கொடூரமான சூழ்ச்சிகளை முறியடித்து மகாசக்தி வென்றதா என்பதே இந்த ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் கதை

தரிசனம்:

  • நயன்தாரா: சென்னை காவல் அதிகாரியாகத் தொடங்கி, கதையின் போக்கில் அம்மன் அவதாரத்தின் கம்பீரத்தை வெளிப்படுத்தும் இடங்கள் வரை தன் நடிப்பால் படத்தைத் தாங்கிப் பிடித்துள்ளார். திரையில் அவர் தோன்றும்போது ஏற்படும் கம்பீரமும் பக்தி பரவசமும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

  • ரெஜினா கசாண்ட்ரா: வழக்கமான வில்லி கதாபாத்திரமாக இல்லாமல், கவர்ச்சியும் மிரட்டலும் கலந்த வில்லத்தனத்தில் அசத்தியுள்ளார்.

  • பிற நடிகர்கள்: துனியா விஜய், கருடா ராம், ஊர்வசி, மைனா நந்தினி, யோகி பாபு எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செவ்வனே செய்துள்ளனர்.

நாதமும் கானமும்:

 ஹிப்ஹாப் ஆதியின் பின்னணி இசை படத்தின் வேகத்திற்குப் பெருமளவு துணைபுரிந்துள்ளது. குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சியில் வரும் அம்மன் பாடல் திரையரங்குகளில் பெண்களைச் பரவசத்தில் மூழ்கடிக்கும் அளவுக்கு அதிரடியாக அமைக்கப்பட்டுள்ளது.

ஞானக் கண்:

இத்திரைப்படத்திற்கு கிருஷ்ணசாமி  ஒளிப்பதிவு செய்துள்ளார். சுந்தர். சி-யின் பிரம்மாண்ட கமர்ஷியல் காட்சி அமைப்புகளைத் திரையில் மிகச் சிறப்பாகக் கொண்டு வந்ததில் இவரது கேமரா பணி முக்கியப் பங்கு வகிக்கிறது.

அம்மன் அவதாரக் காட்சிகள்: நயன்தாராவின் காவல் அதிகாரி தோற்றத்தில் இருந்து அம்மன் அவதாரத்திற்கான கம்பீரமான மாற்றங்களை ஒளிப்பதிவாளர் மிக அற்புதமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

லைட்டிங் மற்றும் கோணங்கள்: பக்தி மற்றும் திகில் கலந்த பின்னணியில், அம்மனின் கோபத்தையும் சக்தி வாய்ந்த தருணங்களையும் வெளிப்படுத்தும் வண்ணப் பயன்பாடும் (Coloring), லைட்டிங் முறைகளும் படத்திற்குப் பெரிய பலம்.

மாயாஜாலம்: சிஜி (CG) மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் அதிகம் நிறைந்த படத்தில், நிஜக் காட்சிகளோடு VFX பகுதிகள் பிசிறு தட்டாமல் ஒன்றிப்போகும் வகையில் கேமரா கோணங்களை அமைத்துத் திரையரங்க அனுபவத்தைக் கூட்டியுள்ளார்.

 பாம்புப் படிக்கட்டு காட்சிகள், சிங்கத்தின் மீது அம்மன் வரும் காட்சிகள் மற்றும் கிளைமேக்ஸ் சிறப்புத் தோற்றங்கள் ஆகியவை திரையரங்க அனுபவத்தைக் கூட்டுகின்றன. திரைப்படத்திற்கு ஒரு வண்ணமயமான பிரம்மாண்டத்தைக் கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி.

பிரம்மா:

படம் வெளியாவதற்கு முன் எழுந்த பல்வேறு விமர்சனங்களையும் ட்ரோல்களையும் தவிடு பொடியாக்கி, ரசிகர்களைத் திரையரங்கு நோக்கிப் படையெடுக்க வைத்துள்ளார் இயக்குநர் சுந்தர். சி. முதல் பாகத்திற்கும் இதற்கும் கதை ரீதியாகத் தொடர்பில்லை என்றாலும், ‘மூக்குத்தி அம்மன்’ என்ற தலைப்பிற்கு முற்றிலும் புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளார். புராணக் கதைகளின் ஈர்ப்பு, திகில், கமர்ஷியல் அம்சங்கள் மற்றும் பக்திச் சிலிர்ப்பு ஆகிய அனைத்தையும் சரியான விகிதத்தில் கலந்து, ஒரு மெகா கமர்ஷியல் அம்மன் விருந்தாகப் படைத்துள்ளார்.

வரமும் சாபமும்:

கதைக் களத்தில் சில தெரிந்த புராணக் கூறுகள் மற்றும் சர்வதேசத் திரைப்படங்களின் ஈர்ப்புகள் ஆங்காங்கே தென்பட்டுகின்றன. ஆனால் வழக்கம்போல தனது திரைக்கதை யுக்தியால் மறக்கடித்து சுவாரசியமான கமர்ஷியல் அனுபவமாகத்  கொண்டுவந்த விதத்தில் சுந்தர். சி வென்று காட்டுகிறார்.

சுபம்:

பக்தி, பிரம்மாண்டம், சுவாரசியமான திருப்பங்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’, இந்த விடுமுறைக் காலத்தில் குடும்பத்தோடு கண்டு மகிழக்கூடிய ஒரு அட்டகாசமான என்டர்டெய்னர்.

பலன்: 4.1/5