நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத பிறந்த நாளாம்.. ஏன் தெரியுமா?
நடிகர் யஷ்ஷின் செல்லக் சுட்டிகளான ஐரா மற்றும் யதர்வுக்கு இந்த பிறந்தநாள் சும்மா சொல்லக் கூடாதுங்க… செம மாஸான பிறந்தநாள்!
நமித் மல்ஹோத்ரா மற்றும் யஷ்ஷின் ‘மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்’ இணையும் பிரம்மாண்ட படைப்பான ‘ராமாயணா’ படத்தோட ஸ்பெஷல் பிரிவியூ காட்சியை, லாஸ் ஏஞ்சல்ஸில் பார்த்து மெய்சிலிர்த்துப் போயிருக்காங்க இந்த வாண்டுகள்! அதுவும் இன்னைக்கு (அக்டோபர் 30) தனது 7-வது பிறந்தநாளைக் கொண்டாடும் யதர்வுக்கும், 7 வயதாகும் அக்கா ஐராவுக்கும் இது வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத ஸ்வீட் மெமரி!
அப்பா யஷ் இதுல ராவணனா வேற கெத்து காட்ட போறாரு! இந்த படத்துக்கும் யஷ் குடும்பத்துக்கும் ஒரு அழகான செண்டிமெண்ட் கனெக்ட்டும் இருக்கு.
-
ஐரா: மகாலட்சுமியின் இன்னொரு பெயரான ‘ஐராவதி’யிலிருந்த வந்த பெயர்!
-
யதர்வ்: ‘முழுமையானவன்’னு அர்த்தம். அதுமட்டும் இல்லாம, யஷ், ராதிகா, ஐரா மூணு பேரோட பெயரையும் சேர்த்து வச்ச அழகான பெயர்!
இப்படி பெயரிலேயே இதிகாசத் தொடர்பு வச்சிருக்கற இந்த குட்டி சுட்டிகளுக்கு, ‘ராமாயணா’ படம் மனசுக்கு ரொம்பவே நெருக்கமா அமைஞ்சதுல ஆச்சரியமே இல்லை!
இன்னும் அஞ்சே நாளில் — நவம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் ராவணனின் ஆட்டத்தை பார்க்க தயாராகுங்க! டிக்கெட் புக்கிங் ஓபன்… உடனே புக் பண்ணிடுங்க!

