ஆவேச அருளின் ‘வேட்டைசாமி’! ஜிப்ரான்-மாதவி-ஜெகன் கவி கூட்டணியில் மிரட்டும் ‘சாமி அழைப்பு’!

ஆவேச அருளின் ‘வேட்டைசாமி’! ஜிப்ரான்-மாதவி-ஜெகன் கவி கூட்டணியில் மிரட்டும் ‘சாமி அழைப்பு’!

‘7 மைல்ஸ் பெர் செகண்ட் புரொடக்சன்ஸ்’ சார்பில், சாமுவேல் மேத்யூ தயாரிக்க, ‘பம்பர்’ படப்புகழ் எம். செல்வக்குமார் இயக்கத்தில், அருள்நிதி மற்றும் அமீர் இணைந்து நடிக்கும் ‘வேட்ட சாமி’ திரைப்படம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ஜிப்ரான்

இத்திரைப்படத்தின் முதல் பாடலான ‘சாமி அழைப்பு’ லிரிக்கல் வீடியோ வெளியாகி, பக்தியையும் கிராமத்து உணர்வுகளையும் நேசிக்கும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இசையமைப்பாளர் ஜிப்ரானின் பாரம்பரியமிக்க நாட்டுப்புற இசையில் உருவாகியுள்ள 7 பாடல்களில் முதல் பாடல் இது.

வில்லுப்பாட்டு ன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களின் அன்பு பெற்ற வில்லிசைக் கலைஞர் மாதவி, முதன்முறையாக திரைப் பின்னணியில் தோன்றி இருக்கிறார். இந்த ஆன்மீகப் பாடல், கிராமத்துக் கோவில் திருவிழாவின் மெய்சிலிர்க்க வைக்கும் தெய்வீக அதிர்வை அப்படியே உங்கள் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது!  

மாதவி
மாதவி

 ‘தாய் கிழவி’, ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல்கள் மூலம் கவனம்பெற்ற பாடலாசிரியர் மு.ஜெகன் கவிராஜ்,   இந்தப் பாடலின் கம்பீரமான வரிகளை எழுதியுள்ளார். தென் தமிழகத்தின் திருவிழா மைதானங்கள், காற்றில் பறக்கும் வேப்பிலை, காதுகளைப் பிளக்கும் மேளதாள சத்தம், ஊரே திரண்டு நின்று கும்பிடும் பக்திப் பரவசம்… இந்த அசல் கிராமத்து வைபவத்தை அப்படியே கண்முன்னே கொண்டு வருகிறது இந்த ‘சாமி அழைப்பு’ பாடல்!


பாடல் உரிமையை, ப்ரைம் 9 மியூசிக் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. 

இத்திரைப்படத்தில் அருள்நிதி – அமீர் கூட்டணியுடன் இயக்குநர் தமிழ், விஜி சந்திரசேகர், ‘ஆடுகளம்’ நரேன், அர்ஜெய், ஓஏகே சுந்தர், மதுசூதனன், மைனா நந்தினி, கவிதா பாரதி மற்றும் நந்தினி எனப் பலரும் நடித்துள்ளனர்.

ஜெகன் கவிராஜ்
ஜெகன் கவிராஜ்

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு மற்றும் ரூபனின் படத்தொகுப்புடன் தென் தமிழகத்தின் பண்பாடு, வீரம் மற்றும் ஆழமான தெய்வ நம்பிக்கையை அச்சு அசலாகக் காட்சிப்படுத்தியுள்ளது படக்குழு. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் டிசம்பர் மாதம் ‘வேட்ட சாமி’ திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஊர் திருவிழாவின் சிலிர்ப்பை ஸ்கிரீனில் அனுபவிக்கத் தயாராகுங்கள்!

Related Posts