எதிர்பார்ப்பை கிளப்பும் ‘வேட்டுவம்’! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

எதிர்பார்ப்பை கிளப்பும் ‘வேட்டுவம்’! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பொங்கல் 2027 ரேஸில் தர்மன், சேயோன் எனப் பல படங்கள் அடிபட்டுக்கொண்டிருந்த வேளையில், எந்தப் பேச்சும் இல்லாமல் கெத்தாக முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக களத்தில் குதித்து எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது பா. இரஞ்சித்தின் ‘வேட்டுவம்’! நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள இந்த பிரம்மாண்ட அப்போகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம், உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள செய்தி ரசிகர்களை இப்போதே துள்ளிக்குதிக்க வைத்திருக்கிறது.

சமீபத்தில் வெளியாகி இணையத்தைக் கலக்கிய ‘World of Vettuvam’ வீடியோவே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்துவிட்டது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் அசத்தலாக வெளியான இந்த வீடியோவிற்கு தமிழில் பா. இரஞ்சித், இந்தியில் பங்கஜ் திரிபாதி, தெலுங்கில் ராணா டகுபதி, மலையாளத்தில் சௌபின் ஷாஹிர், கன்னடத்தில் கிச்சா சுதீப் என இந்தியத் திரையுலகின் டாப் ஸ்டார்கள் குரல் கொடுத்து மிரட்டியுள்ளனர்.

ஒரு பிரம்மாண்டமான உலகப் பின்னணியில், வெவ்வேறு குழுக்களுக்கு இடையே நடக்கும் அதிகாரப் போட்டி, அசாத்திய திருப்பங்கள் மற்றும் அனல் பறக்கும் மோதல்களோடு பயணிக்கும் கதைக்களம் இது. வெறும் சாதாரண சண்டைக் காட்சிகள் இல்லாமல், நமது பாரம்பரியத் தற்காப்புக் கலைகளான அடிமுறை மற்றும் மல்லகம்ப் கலைகளை மையமாகக் கொண்டு நடிகர்களுக்கு தீவிரப் பயிற்சி அளித்து, வேற லெவல் ஆக்ஷன் விருந்தாகப் படமாக்கியுள்ளனர்.

ஆர்யா, தினேஷ், ஷபீர், ஷோபிதா துலிபாலா, கலையரசன் எனப் பட்டாளமே களமிறங்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே. படத்தொகுப்புப் பொறுப்பை ஏந்தியுள்ளார். எஸ்.எஸ். மூர்த்தியின் கலை இயக்கம் மற்றும் திலீப் சுப்பராயனின் வெறித்தனமான சண்டைப் பயிற்சியில் உருவாகியுள்ள இந்த பான்-இந்தியத் திரைப்படம், பொங்கல் 2027-ல் தியேட்டர்களில் ஆக்ஷன் புயலைக் கிளப்போகிறது.

Related Posts