சூர்யாவால் அறிமுகமான மித்துன் மாணிக்கம் களமிறங்கும் ‘ஃபேமிலி பாய்’: மிரட்டலான டீசர் வெளியீடு!

சூர்யாவால் அறிமுகமான மித்துன் மாணிக்கம் களமிறங்கும் ‘ஃபேமிலி பாய்’: மிரட்டலான டீசர் வெளியீடு!

‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகின் கவனத்தை ஈர்த்தவரும், நடிகர் சூர்யாவால் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டவருமான மித்துன் மாணிக்கம், இப்போது இயக்குநர் மற்றும் நாயகனாக மிரட்ட ‘ஃபேமிலி பாய்’ (Family Boy) படத்துடன் வலம் வரத் தயாராகிவிட்டார். இப்படத்தின் டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை செமத்தியாகக் கவர்ந்துள்ளது!

யார் யார் இருக்காங்க? மெக்கானிக் பிக்சர்ஸ் சார்பில் மித்துன் மாணிக்கம் தயாரித்துள்ள இப்படத்தை, மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழகம் முழுவதும் இப்படத்தை பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

இயக்குநர் மித்துன் மாணிக்கத்துடன் எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ் மற்றும் பி.எல். தேனப்பன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் பட்டையை கிளப்பியிருக்கிறது. கார்த்திக் கே. கதிரவனின் ஒளிப்பதிவு, நிர்மல் ஜே.பி-யின் பின்னணி இசை, ஜிஜேந்திரன் வி-யின் படத்தொகுப்பு என டெக்னிக்கல் விஷயங்களும் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளன.

டீசர் சொல்லும் கதை என்ன? “சிலப்பதிகாரத்துல தொடங்கி சிங்கார சென்னை வரைக்கும்… ஒரு பொருள் தொலையும்போது, அதைத் தொலச்சவனுக்குத்தான் அதோட வலி புரியும்…” என்ற மாஸான வசனத்துடன் தொடங்குகிறது டீசர்.

2020-ல் ஒரு எளிய குடும்பத்தில் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ஃபேமிலி டிராமா ஆக்ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. காணாமல் போன ஒரு முக்கியமான பொருளைத் தேடி நாயகன் மேற்கொள்ளும் ஒரே நாள் பயணமும், அதன் வழியில் வரும் எதிர்பாராத திருப்பங்களும் தான் படத்தின் கதைக்களம் என்பதை இந்த டீசர் சுவாரசியமாகச் சொல்கிறது.

எப்போ ரிலீஸ்? டீசரின் அதிரடியான பின்னணி இசையும், நேர்த்தியான காட்சி அமைப்புகளும் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அணு அணுவாக ஏற்றியுள்ளன. அனைவரையும் கவர்ந்துள்ள இந்த ‘ஃபேமிலி பாய்’ வருகிற டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீசாகிறது!

Related Posts