யோகி பாபுவின் ‘சிங்காரம்’: ப்ரீ ஈவன்ட் கோலாகலம்… அக்.,30 ரிலீிஸ்!

யோகி பாபுவின் ‘சிங்காரம்’: ப்ரீ ஈவன்ட் கோலாகலம்… அக்.,30 ரிலீிஸ்!

ராக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘சிங்காரம்’ திரைப்படத்தின் முன்வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல், வரலாற்றுப் பின்னணி மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சமூக விழிப்புணர்வுடன் நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளையும் இணைத்துப் பேசும் படமாக உருவாகி உள்ளது.

இப்படத்தில் வேல ராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், மரியா வின்சென்ட், படவா கோபி, சென்ட்ராயன், தீபா சங்கர், சபிதா ராய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் மற்றும் படக்குழுவினர் படத்தின் சிறப்புகளைப் பகிர்ந்துகொண்டனர். மேலும், வரும் அக்டோபர் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

Related Posts