ஜோஜு ஜார்ஜின் ‘பரிபாடி’: மலையாளத்தில் தடம் பதிக்கும் யுவன்!  

ஜோஜு ஜார்ஜின் ‘பரிபாடி’: மலையாளத்தில் தடம் பதிக்கும் யுவன்!  

‘பனி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ஜோஜு ஜார்ஜ் எழுப்பி இயக்கும் இரண்டாவது படமான ‘பரிபாடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. காவ்யா ஃபிலிம் கம்பெனி சார்பில் வேணு குன்னப்பள்ளி தயாரிக்கும் இப்படம், பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் சிறப்பு அம்சங்கள் இதோ:

  • யுவன் ஷங்கர் ராஜாவின் மலையாள என்ட்ரி: தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் மலையாள திரையுலகில் அதிகாரப்பூர்வமாக கால்பதிக்கிறார்.

  • நூறு புதிய முகங்கள்: திரிசூர் மற்றும் சாலக்குடி பின்னணியில் உருவாகும் இப்படத்தில், நான்கு மாத கால சிறப்பு பயிற்சி பெற்ற சுமார் 100 புதிய முகங்கள் வசனம் பேசும் முக்கிய கதாபாத்திரங்களில் அறிமுகமாகின்றனர்.

  • பலத்த தொழில்நுட்பக் கூட்டணி: ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, சண்டை பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ், படத்தொகுப்பாளர் மனு ஆண்டனி, சவுண்ட் டிசைனர் அஜயன் அதத் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் சாபு மோகன் என இந்திய சினிமாவின் பல முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் கைகோர்த்துள்ளனர்.

  • ஐந்து மொழிகளில் ரிலீஸ்: மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் வருகிற டிசம்பர் மாதம் உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தற்போது இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சினிமா வட்டாரத்திலும் ரசிகர்களுக்கும் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts