புதிய த்ரில் அனுபவங்களை அளிக்கும் Zee 5: அதிரடியாக ஸ்ட்ரீமிங்.. கண்டுகளியுங்கள்!

புதிய த்ரில் அனுபவங்களை அளிக்கும் Zee 5: அதிரடியாக ஸ்ட்ரீமிங்.. கண்டுகளியுங்கள்!

இந்தியாவின் முன்னணி OTT தளமான Zee 5, தனது பயனர்களுக்கு புதிய மற்றும் ஸ்மார்ட்டான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்க மிக பிரம்மாண்டமான மறுவடிவமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 9, 2026 அன்று வெளியிடப்பட்ட இந்த புதிய அறிவிப்பு, மொபைல் மற்றும் Connected TV பயனர்களின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை முற்றிலும் மாற்றியமைக்க உள்ளது.

ஸ்மார்ட் தொழில்நுட்பம் & 5 புதிய உலகங்கள்: பார்வையாளர்களின் விருப்பத்திற்கேற்ப Zee 5 தளம் தற்போது Premium Entertainment, Free 5, KidZ, TV, Sports என 5 தனித்துவமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. AI (செயற்கை நுண்ணறிவு) அடிப்படையிலான தேடலால், உங்களுக்குப் பிடித்தமான படங்களையும் தொடர்களையும் நொடியில் கண்டறியலாம். சிறிய மொபைல் திரையிலிருந்து பெரிய டிஜிட்டல் திரைக்குத் தடையின்றி மாறும் வசதியும், சந்தா மற்றும் தொழில்நுட்ப சந்தேகங்களைத் தீர்க்க உடனடி AI வாடிக்கையாளர் உதவி மையமும் சேர்க்கப்பட்டுள்ளன. பயனர் தரவுகளின் பாதுகாப்பிற்காக அதிநவீன பாதுகாப்பு அம்சங்களும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பயனர்களின் குரலுக்கு மதிப்பளித்த Bugathons: இந்த புதிய மாற்றத்திற்கு முன்னதாக இந்தியா முழுவதும் விரிவான நுகர்வோர் ஆய்வுகள், செயலி பின்னூட்டங்கள் (App Feedback) மற்றும் குழு விவாதங்கள் (Focus Groups) நடத்தப்பட்டன. Product, Design மற்றும் Engineering குழுக்கள் இணைந்து நடத்திய தீவிர ‘Bugathons’ மூலம் செயலியின் ஒவ்வொரு அம்சமும் துல்லியமாகச் சோதிக்கப்பட்டு, மிக மென்மையான பயன்பாட்டு அனுபவம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

FIFA உரிமம் & ஹாலிவுட் நட்சத்திரங்களின் ஆங்கிலக் கொண்டாட்டம்: சமீபத்தில் FIFA World Cup 2026™ மற்றும் 2030 போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய Zee 5, தற்போது ஆங்கில உள்ளடக்கப் பிரிவில் மாபெரும் பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது. PVR INOX PICTURES மற்றும் LIONSGATE PLAY ஆகிய நிறுவனங்களுடனான கூட்டணியின் மூலம் பிரம்மாண்ட ஹாலிவுட் திரைப்படங்கள் இதோ:

  • Normal (பாப் ஓடன்கிர்க், ஹென்றி விங்க்லர், லீனா ஹெடே)

  • The Invite (செத் ரோகன், பெனிலோப் க்ரூஸ், எட்வர்ட் நார்டன், ஒலிவியா வைல்ட்)

  • Anxious People (அஞ்சலினா ஜோலி, ஜேசன் சேகல்)

  • Babies (செத் ரோகன், அன்னா கென்ட்ரிக்)

  • The Wizard of the Kremlin (ஜூட் லா)

  • How to Make a Killing (கிளென் பவல், மார்கரெட் குவாலி)

  • Tony (டொமினிக் செஸ்ஸா)

  • Paper Tiger (ஆடம் டிரைவர், ஸ்கார்லெட் ஜோஹன்சன், மைல்ஸ் டெல்லர்)

இலவசப் பொழுதுபோக்கிற்கு ‘Free 5’: எந்தவித கட்டணமும் சந்தாவும் இன்றி இலவசமாகவே பார்க்கும் ‘Free 5’ சேவை முற்றிலும் புதிய பொலிவு பெற்றுள்ளது. இதில் தொடர்கள், திரைப்படங்கள், கொரியன் மற்றும் சைனீஸ் டிராமாக்கள், அனிமே, செய்திகள், மைக்ரோ டிராமாக்கள் மற்றும் கிரியேட்டர்களின் பிரத்யேக வீடியோக்கள் இடம்பெறுகின்றன. இது விளம்பரதாரர்களுக்கும் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

தலைமைகளின் கருத்து: Zee 5 இந்தியா மற்றும் AI பிரிவின் தலைவர் தேஜ்கரன் சிங் பஜாஜ் பேசுகையில், “பார்வையாளர்கள் விரும்புவதை மிக எளிதாகக் கண்டறியும் வகையில் 7 மொழிகளில் சிறந்த உள்ளடக்கம், விளையாட்டு மற்றும் சர்வதேச சினிமாக்களை ஒருங்கிணைத்துள்ளோம்,” என்றார். Chief Technology Officer பிரமோத் பிரகாஷ், “குடும்பத்தின் அனைத்துத் தலைமுறையினரும் சிரமமின்றி பயன்படுத்தக்கூடிய எளிய, நம்பகமான தொழில்நுட்பத்தை Zee 5 உருவாக்கியுள்ளது,” எனப் பெருமிதம் தெரிவித்தார்.

190-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி என 7 மொழிகளில் இயங்கும் Zee 5, இனி நேரலை விளையாட்டுகள், அனிமேஷன் மற்றும் உலகளாவிய கதைகளுடன் இந்தியாவின் துணிச்சலான பொழுதுபோக்கு முகவரியாக மிளிரும்!

Related Posts