தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் ஜாமீன் உறுதி! ஈ.டி. மனு தள்ளபடி! உச்ச மன்றம் அதிரடி!

தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் ஜாமீன் உறுதி! ஈ.டி. மனு தள்ளபடி! உச்ச மன்றம் அதிரடி!

போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளில் திரைப்பட தயாரிப்பாளரும் தொழிலதிபருமான ஜாஃபர் சாதிக்குக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

திரைப்பட தயாரிப்பாளரும் தொழிலதிபருமான ஜாஃபர் சாதிக், போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளில் செய்ததாகக் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றம் ஜாஃபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கியது. ஆனால், சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு காரணமாக,  அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியாமல் இருந்தது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் அவ்வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து ஜாஃபர் சாதிக் விடுவிக்கப்பட்டார்.

உயர் நீதிமன்றத்தின் இவ்வுத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது.

இவ்வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி நீண்ட காலம் ஆகிவிட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்தனர்.

இதன் மூலம் ஜாஃபர் சாதிக் மற்றும் அவரது சகோதரருக்குக் கிடைத்துள்ள ஜாமீன் சட்டரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.