ரஜினியின் 51 ஆண்டு சாதனை! ‘தர்மன்’ தளத்தில் கொண்டாட்டம்!

ரஜினியின் 51 ஆண்டு சாதனை! ‘தர்மன்’ தளத்தில் கொண்டாட்டம்!

மிழ் சினிமாவின் முடிசூடா மன்னன், வசூல் சக்கரவர்த்தி, காலங்கள் கடந்தும் காந்தக் குரலாலும் கம்பீரக் காரிஷ்மாவாலும் திரையைக் கட்டிப்போடும் ஒரே ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்து, ஐந்து தசாப்தங்களைக் கடந்து ஐம்பத்தோராவது ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் வரலாற்றுத் தருணம் இது! இந்தியத் திருநாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் பதினைந்து அன்று, திரையுலகிற்கும் ஒரு புதிய சுதந்திரக் காற்று வீசியது.

ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்தைந்தாம் ஆண்டில், இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் வாயிலாக, கதவைத் திறந்து உள்ளே நுழைந்த அந்த மெலிந்த கறுப்பு நிற இளைஞன், பின்னாளில் இந்தியத் திரையுலகின் இமயமாய் உயர்ந்து நிற்பார் என்று அன்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அன்று தொடங்கிய அந்த அபாரமான திரைப்பயணம், இதோ அரை நூற்றாண்டையும் தாண்டி அசைக்க முடியாத ஆலமரமாய் நிமிர்ந்து நிற்கிறது. ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாகத் தனது அசுரத்தனமான ஸ்டைலாலும், சுண்டி இழுக்கும் மேனரிசத்தாலும், குழந்தைகளுக்கான துள்ளலான நகைச்சுவையினாலும், பெரியவர்களுக்கான உணர்ச்சிப்பூர்வமான நடிப்பினாலும் தலைமுறை தலைமுறையாய் ரசிகர்களின் இதயங்களை ஆள்கிறார். திரையில் அவர் நடக்கும் நடை, கண்ணாடி போடும் விதம், சிகரெட் சுற்றும் ஸ்டைல், சிரிக்கும் சிரிப்பு என ஒவ்வொன்றுமே ரசிகர்களுக்குத் தனிப் பெரு விருந்து!

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஐம்பத்தோராம் ஆண்டு திரைப்பயணக் கொண்டாட்டம், அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கலந்து கொள்ள, இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் படக்குழுவினர் அனைவரும் ஒன்று கூடி, ஒரு பிரம்மாண்டமான கேக் வெட்டித் தங்களின் அளப்பரிய அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தினர்.படப்பிடிப்புத் தளமே விழாக்கோலம் பூண்டு, ஆரவாரத்திலும் மகிழ்ச்சியிலும் திளைத்தது. ‘ரஜினியிசம்’ என்ற மந்திரச் சொல் தலைமுறை தாண்டி இன்றும் எப்படி ரசிகர்களைத் துள்ளிக்குதிக்க வைக்கிறது என்பதை அந்தத் தருணம் மீண்டும் நிரூபித்தது.

இந்தக் கொண்டாட்டத்திற்கு மேலும் ஒரு மகுடமாக அமைந்தது அதன் தயாரிப்புக் கூட்டணி! உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், டர்மெரிக் மீடியா நிறுவனமும் இணைந்து இந்தப் பிரம்மாண்டமான ‘தர்மன்’ திரைப்படத்தைத் தயாரிக்கின்றன.

திரையுலகில் சகாப்தம் படைத்த இரு பெரும் துருவங்களான கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணையும் இந்தப் படப்பிடிப்புத் தளம், தலைவரின் ஐம்பத்தோராம் ஆண்டுக் கொண்டாட்டத்தால் மேலும் பொலிவும் சிறப்பும் பெற்றது! ‘தர்மன்’ படத்தின் மூலமாக இந்த ரஜினி-ராஜ்ஜியம் இன்னும் பல புதிய சாதனைகளைப் படைக்கப் போவது உறுதி!

Related Posts