காதல் மழையில் நனைய வைக்கும் ஏன் என்னை ஏதோ செய்தாய் டீசர்
தனிமையில் வாடி இருளில் மூழ்கியிருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை காதல் எப்படி வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது என்பதை அழகாக சொல்ல வருகிறது ஏன் என்னை ஏதோ செய்தாய் திரைப்படம்
டி ஆண்டனி நாயகனாக நடித்து இயக்கி தயாரித்துள்ள இந்த காவிய காதல் படத்தின் டீசர் இப்போது வெளியாகி ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்து வருகிறது
இன்றைய தலைமுறையினரை கவரும் வகையில் நவீன திரைக்கதையோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் அனைத்து பாடல்களும் நேரடி இசைக்கருவிகள் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளன அதுமட்டுமின்றி முழு படமும் நேரடி ஒலிப்பதிவு முறையில் உருவாகியிருப்பது கூடுதல் சிறப்பு
காதலின் மென்மையையும் வாழ்க்கையின் வலியையும் உணர்வுபூர்வமாக சொல்லும் இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது காதலையும் இசையையும் நேசிக்கும் ரசிகர்களுக்கு இது ஒரு அருமையான கொண்டாட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை
