சர்தார் 2: அதிர வைக்கும் டீசர்.. மீண்டும் மாஸாக வருகிறார் கார்த்தி!

சர்தார் 2: அதிர வைக்கும் டீசர்..  மீண்டும் மாஸாக வருகிறார் கார்த்தி!

இயக்குநர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி, இணையதளங்களை அலறவிட்டுக்கொண்டிருக்கிறது.

முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இப்போது வெளியாகியுள்ள டீசரில் மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள், கார்த்தியின் தூக்கலான வித்தியாசமான கெட்டப்புகள் என ரசிகர்களுக்குச் செம விருந்து காத்திருக்கிறது!

சாம். சி. எஸ். இசையில் பின்னணி இசை வெறித்தனமாக எகிறியிருக்க, ஜார்ஜ் சி. வில்லியம்சின் ஒளிப்பதிவும், திலீப் சுப்பராயனின் சண்டைப்பயிற்சியும் படத்தின் எதிர்பார்ப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளன. ராஜீவன் நம்பியாரின் கலை இயக்கம், வேலுக்குட்டியின் படத்தொகுப்பு என தொழில்நுட்பக் குழுவும் கச்சிதமாக அமைந்திருக்கிறது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் மற்றும் விவிஒய் இஷான் சக்சேனா இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், வரும் செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி உலகமெங்கும் கொண்டாட்டமாகத் திரைக்கு வருகிறது!

டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் ட்ரெண்டாகி மிகப்பெரிய அலையை உருவாக்கியுள்ளது. விரைவில் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் கொண்டாட்டம் தொடங்கவுள்ளது!