மண் காவலர்களுக்கு மரியாதை! நெகிழ வைத்த நடிகர் சௌந்தரராஜா!

மண் காவலர்களுக்கு மரியாதை! நெகிழ வைத்த நடிகர் சௌந்தரராஜா!

நம்ம மண்ணையும் விவசாயத்தையும் உயிராக நேசிக்கும் நடிகர் சௌந்தரராஜா, தனது ‘மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை’ சார்பாக மீண்டும் ஒரு தூள் கிளப்பும் நற்செயலைச் செய்திருக்கிறார்.

இயற்கை வேளாண்மையின் பிதாமகன் நம்மாழ்வாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தஞ்சாவூரில் நேர்மையோடு இயற்கை விவசாயம் செய்துவரும் மண்ணின் மைந்தர்களுக்கு ‘நம்மாழ்வார் விருது’ வழங்கி கௌரவித்திருக்கிறார். விருதுகளோடு சேர்த்து ஊக்கப் பரிசுகளையும் அள்ளி வழங்கி, விவசாயிகளின் முகத்தில் அளவற்ற மகிழ்ச்சியைப் பூக்க வைத்திருக்கிறார்.முந்தைய ஆண்டில் உசிலம்பட்டியில் தொடங்கப்பட்ட இந்த நற்செயல், இந்த முறை தஞ்சாவூரில் மென்மேலும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. தஞ்சை சட்டமன்ற உறுப்பினர், வேளாண் சான்றோர்கள் மற்றும் நம்மாழ்வாரின் குடும்பத்தினர் எனப் பல பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவை உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள்.

விவசாயம் என்பது வெறும் தொழில் அல்ல, அது நம் மண்ணையும் உயிர்களையும் காக்கும் வாழ்க்கைமுறை என்று உரக்கச் சொன்ன சௌந்தரராஜா, இன்றைய இளைஞர்கள் விவசாயத்தின் பெருமையை உணர வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக்கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் மரங்களை நட்டு நீர்நிலைகளைப் பாதுகாப்பதே நமது தலைசிறந்த கடமை என்பதையும் சுட்டிக்காட்டினார். மண்ணைக் காக்கும் இந்த அறக்கட்டளையின் பயணம், வரும் காலங்களிலும் மாணவர்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் தொடர்ந்து புதிய வேகத்தில் பயணிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Related Posts