விஷாலின் ‘மகுடம்’ அதிரடி! மில்லியன் கடந்து மிரட்டும் ‘லிங்கா’ பாடல் – ராப் பாடகர் V7h உற்சாகம்!

விஷாலின் ‘மகுடம்’ அதிரடி! மில்லியன் கடந்து மிரட்டும் ‘லிங்கா’ பாடல் – ராப் பாடகர் V7h உற்சாகம்!

விஷால் இயக்கி நடிக்கும் ‘மகுடம்’ படத்தின் ‘லிங்கா’ பாடல், வெளியான குறுகிய காலத்திலேயே மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து இணையத்தில் செம வைரலாகி வருகிறது! கெத்தான லிங்கா கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில், மாஸான ராப் வரிகளுடன் ஜி.வி. பிரகாஷ் இசையில் இந்தப் பாடல் இளைஞர்களின் பிளேலிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளது.

இப்பாடலைப் பாடிய ராப் பாடகர் வினோத் (V7h), தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார். “12-ஆம் வகுப்பிலிருந்தே இசையுடன் பயணிப்பவன் நான். உணவகத் தொழிலால் சினிமாவில் சற்று இடைவெளி ஏற்பட்டாலும், இசையைக் கைவிடவில்லை. என்னிடம் இப்போது சுமார் 40 பாடல்கள் தயார் நிலையில் உள்ளன. இந்தத் தருணத்தில் விஷால் அண்ணா கொடுத்த ஊக்கமும், ஜி.வி. பிரகாஷ் அளித்த வாய்ப்பும் என் இசைப் பயணத்திற்கு ஒரு பெரும் புத்துயிர் அளித்துள்ளது,” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

விஷால் அண்ணா என் திறமையை நம்பி வாய்ப்பளித்தார், அவர் சொன்ன வார்த்தைகள் தான் என்னை மீண்டும் களத்தில் இறக்கியுள்ளது என்கிறார் வினோத். இனி வரும் காலங்களில் தனது மற்ற பாடல்களையும் வெளியிடுவதிலும், விஷால் அவர்களின் நிறுவனத்திற்காக ஒரு தனி ஆல்பம் உருவாக்குவதிலும் மும்முரமாக இருக்கிறாராம் வினோத்.

ஆர்.பி. செளத்ரி வழங்க, விஷால் இயக்கத்தில் உருவாகும் ‘மகுடம்’ திரைப்படம், இசை மற்றும் மேக்கிங் என இரண்டிலும் ரசிகர்களுக்கு ஒரு அதிரடி விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை! வினோத்தின் இந்த ‘லிங்கா’ ராப் பயணத்திற்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பு அளித்து வருகின்றனர். இசை ஆர்வலர்கள் இந்தப் பாடலை ஒருமுறை கேட்டுத் தீர்த்தால், அதன் தாளம் உங்களை விட்டுப் போகாது!

Related Posts