‘ஆனந்தன் காடு’ அதிரடி வருகை: ஆர்யா – ஜியேன் கிருஷ்ணகுமார் கூட்டணியின் பிரம்மாண்டம்!

‘ஆனந்தன் காடு’ அதிரடி வருகை: ஆர்யா – ஜியேன் கிருஷ்ணகுமார் கூட்டணியின் பிரம்மாண்டம்!

மிழ் மற்றும் மலையாளத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘ஆனந்தன் காடு’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.

இதில் ஆர்யா, இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார் மற்றும் இந்திரன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று உற்சாகமாகப் பேசினர்.உணர்வுகளின் சங்கமம்!

வெறும் ஆக்ஷன் படம் மட்டுமல்ல, மனித உணர்வுகளின் ஆழமான பதிவு இது என இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார் சிலாகித்துப் பேசினார். சில உண்மைச் சம்பவங்களின் தாக்கத்தோடு, முரளி கோபியின் கூர்மையான திரைக்கதையில் படம் மிரட்டலாக உருவாகியிருப்பதாக ஆர்யா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

பிரம்மாண்டமான உழைப்பு!

சுமார் இரண்டு ஆண்டுகால கடும் உழைப்பில் உருவான இந்த படைப்பு, தொழில்நுட்ப ரீதியாகவும் மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும் என ஆர்யா உறுதியளித்தார். படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் பங்களிப்பும், ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

சவாலான பயணம்!

தமது திரைப் பயணத்திலேயே மிக முக்கியமான மற்றும் சவாலான கதாபாத்திரம் இது என்று நடிகர் இந்திரன்ஸ் பெருமிதத்துடன் கூறினார். படக்குழுவினரின் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பும் இப்படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.

திரையரங்கிற்கே உரிய பிரம்மாண்டம்!

OTT கலாச்சாரம் பெருகிவிட்ட நிலையிலும், ரசிகர்களின் திரையரங்கு அனுபவத்தை பெரிதும் நம்பி இப்படத்தை வெளியிடுவதாக தயாரிப்பாளர் எஸ்.வினோத் குமார் தெரிவித்தார். சுமார் 60 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில், தரம் குறையாமல் உருவாக்கப்பட்டுள்ள ‘ஆனந்தன் காடு’ உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.எப்போ ரிலீஸ்?

கோகுலம் மூவிஸ் மூலம் உலகம் முழுவதும் வெளியாகத் தயாராக இருக்கும் இந்த அதிரடித் திரைப்படம், ஜூன் 25-ஆம் தேதி ரசிகர்களைச் சந்திக்கிறது. தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகும் இப்படம், திரையரங்குகளில் நிச்சயம் ஒரு மேஜிக்கை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை!

படக்குழுவினர்:

  • இயக்கம்: ஜியன் கிருஷ்ணகுமார்

  • கதை, திரைக்கதை, வசனம்: முரளி கோபி

  • தயாரிப்பு: எஸ். வினோத் குமார்

  • ஒளிப்பதிவு: எஸ். யுவா

  • இசை: பி. அஜனீஷ் லோக்நாத்

  • சண்டைக் காட்சிகள்: ஆர். சக்தி சரவணன்

  • படத்தொகுப்பு: ரோஹித் வி.எஸ். வரியத்

இன்னும் சொல்லப்போனால், படத்திற்குத் தொழில்நுட்ப ரீதியாக வலுசேர்க்கும் வகையில் கலை இயக்கம், விஎஃப்எக்ஸ், ஒலி வடிவமைப்பு என ஒவ்வொன்றிலும் தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஜூன் 25-க்குத் தயாரா இருங்க!

Related Posts