வெற்றிப் பாதையில் ‘டபுள் ஆக்குபன்சி’: மகளின் சாதனையைக் கொண்டாடிய குஷ்பு!

வெற்றிப் பாதையில் ‘டபுள் ஆக்குபன்சி’: மகளின் சாதனையைக் கொண்டாடிய குஷ்பு!

அவ்னி மூவிஸ் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘டபுள் ஆக்குபன்சி’ படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் மிக உற்சாகமாக நடைபெற்றது. இப்படம் சிறிய படமாக இருந்தாலும், ரசிகர்களின் ஆதரவால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகப் படக்குழுவினர் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை குஷ்பு பேசுகையில், தனது இளைய மகள் அவந்திகாவை நெகிழ்ச்சியுடன் பாராட்டினார். இப்படம் தயாரிப்பில் இருந்தபோது பல்வேறு சவால்கள் மற்றும் சிக்கல்கள் எழுந்த போதிலும், அவந்திகா மிகச் சிறப்பாகத் தனது கிரியேட்டிவ் பணிகளைக் கவனித்து வெற்றி பெறச் செய்ததைச் சுட்டிக்காட்டிய குஷ்பு, “என் செல்ல மகள், என் பொம்மைக்கு வாழ்த்துகள்!” என அன்போடு வாழ்த்தி மகிழ்ந்தார்.

மேலும், சுந்தர் சி-யின் தாரக மந்திரமான “நாம் தயாரிக்கும் படம் மக்களை மகிழ்விக்க வேண்டும், அவர்கள் கொடுக்கும் பணத்துக்கு தகுந்ததாக இருக்க வேண்டும்” என்பதைத் தாங்கள் தொடர்ந்து கடைப்பிடிப்போம் என்றும் குஷ்பு குறிப்பிட்டார். இந்த வெற்றி விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு, ரசிகர்களின் வரவேற்பிற்குத் தங்களது மனமார்ந்த நன்றிகளைப் பகிர்ந்துகொண்டனர்.

Related Posts