#D55 மிரட்டலான அறிவிப்பு: தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமியின் பிரம்மாண்ட “ஓம்”!
தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியின் #D55 “ஓம்” படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா, திரையுலகமே வியக்கும் வண்ணம் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. அந்த விழாவில் படக்குழுவினர் பகிர்ந்துகொண்டனர்..
வொண்டர்பார் பிலிம்ஸ் ஷ்ரேயாஸ்: “இயக்குநர் மற்றும் தனுஷ் சாருக்கு பெரிய நன்றிகள்! என் பயணத்திலேயே இதுதான் மிகப்பெரிய பட்ஜெட் படம். R Take Studios உடன் கைகோர்ப்பதில் மகிழ்ச்சி. பழைய பாணியிலான தனுஷ் சாரின் மாஸ் கமர்ஷியல் விருந்து ரசிகர்களுக்கு நிச்சயம் காத்திருக்கிறது. அக்டோபர் 16 திரையரங்கில் சந்திப்போம்!”
R Take Studios ஷ்ரத்தா: “இந்த கூட்டணி அமைந்தது ஒரு அற்புதமான அனுபவம். இந்த பிரம்மாண்டமான பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். அக்டோபர் 16-க்காக ஆவலோடு காத்திருக்கிறேன்!”
R Take Studios அஸ்மத்: “எங்களை இந்தத் திரைப்படத்தில் இணைத்துக்கொண்டதற்கு ராஜ்குமார் சாருக்கு மனமார்ந்த நன்றி. மிகுந்த அர்ப்பணிப்புடன் இப்படைப்பில் பணியாற்றுவோம்!”
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி: “தலைப்பு ‘ஓம்: சேப்டர் 1’. இது வெறும் தலைப்பு மட்டுமல்ல, பல அடுக்குகளைக் கொண்ட அர்த்தமுள்ள விஷயம். தனுஷ் சார், மம்முட்டி சார், சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன் என நட்சத்திர பட்டாளமே இதில் உண்டு. ஒளிப்பதிவாளர் எழிலரசு, படத்தொகுப்பாளர் கலை என சிறந்த தொழில்நுட்ப குழுவுடன் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ரசிகர்களுக்குப் புரியும் வகையில் அடுத்தடுத்து டீசர் மற்றும் டிரெய்லர் அப்டேட்கள் வரும்!”
டிவோ மியூசிக் விஷு: “தனுஷ் சார் படங்களில் இணைவது எப்போதும் பெருமை. ராஜ்குமார் சாரோடு மீண்டும் ஒரு பிரம்மாண்ட பயணம். ‘ஓம்’ படம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் ஒரு பிளாக்பஸ்டராக அமையும்!”
வார்னர் மியூசிக் இந்தியா ஜே மேத்தா: “ராஜ்குமார் சார் ஒரு உண்மையான ஜீனியஸ். தனுஷ் சாரின் நடிப்பாற்றல் உலக தரம் வாய்ந்தது. சாய் பல்லவி, ஸ்ரீலீலா, மம்முட்டி என இவ்வளவு பெரிய நட்சத்திரக் கூட்டணியை காண்பது அரிது. தமிழ்ச் சினிமாவின் மிக முக்கியமான படைப்பாக, எல்லா காலத்திலும் பேசப்படும் படமாக இது இருக்கும்!”
தனுஷ், சாய் பல்லவி, ஸ்ரீலீலா, மம்முட்டி என நட்சத்திரங்களின் சங்கமமாக உருவாகும் இந்த ஆக்ஷன் திருவிழா, சாய் அபயங்கரின் இசையில் அக்டோபர் 16 அன்று திரையரங்குகளில் ரிலீசாகிறது!

