ரிலீஸுக்கு முன்பே கல்லா கட்டிய ‘கட்டா குஸ்தி 2’!: செம்ம குஷியில் விஷ்ணு விஷால்!
ஆக்ஷன், த்ரில்லர், சைக்கோ எனப் பல ஜானர்களில் ரவுண்டு கட்டி அடிக்கும் விஷ்ணு விஷால், இப்போ செம்ம ஹேப்பி மூட்ல இருக்கார்! ஏன்னா, அவரோட பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘கட்டா குஸ்தி’ படத்தோட இரண்டாம் பாகம் ரெடியாகி, ரிலீஸுக்கே முன்பே தாறுமாறான லாபத்தைப் பார்த்து பிசினஸில் சாதனை படைச்சிருக்கு!
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் ஐசரி கே.கணேஷ் இணைந்து தயாரித்துள்ள ‘கட்டா குஸ்தி 2’ வர்ற ஜூலை 3-ஆம் தேதி தியேட்டர்களைத் தெறிக்கவிட வருது. செல்லா அய்யாவு இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையில் உருவான இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பகிர்ந்த சுவாரஸ்யமான பேச்சுகள்:
“அரை மணி நேர ஐடியா!” – இயக்குநர் செல்லா அய்யாவு
“முதல்ல பார்ட் 2 பண்ற ஐடியாவே இல்லை. ஆனா விஷ்ணு கேட்டதும், என்கிட்ட இருந்த ஒரு லைனைச் சொன்னேன். ரெண்டு பேரும் ஒரு அரை மணி நேரம் பேசினோம், அவ்ளோதான்… ‘கட்டா குஸ்தி 2’ ஸ்கிரிப்ட் ரெடி! முதல் பாகத்துல இடைவேளையில ஐஸ்வர்யா லட்சுமி பத்தின ட்விஸ்ட் எப்படி அதிர வச்சதோ, அதைவிட ஒரு தாறுமாறான ட்விஸ்ட் இந்த பாகத்துலயும் இருக்கு. தியேட்டர்ல பார்த்து என்ஜாய் பண்ணுங்க!”
“இது எனக்குக் கிடைத்த வரம்!” – ஐஸ்வர்யா லட்சுமி
“கட்டா குஸ்தி படமே நான் செஞ்ச புண்ணியம். இப்போ பார்ட் 2-வும் கிடைச்சிருக்கிறது பெரும் பாக்கியம். முதல் பாகம் போலவே இந்த கதையும் என்னை மையப்படுத்திதான் நகரும். பெண்களுக்கு முக்கியத்துவம் தர்ற இந்த கேரக்டர் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.”
“என் அக்கா, அம்மாதான் என் பலம்!” – லேடி சென்ட்ரிக் கதைகள் குறித்து விஷ்ணு விஷால்
“காவல்துறை அதிகாரியான என் அப்பாவின் கஷ்டங்களுக்கு நடுவே, என் அக்கா சூப்பரா படிச்சு உலகளாவிய பேங்க்ல பெரிய பொறுப்புல இருக்காங்க. அவங்களாலதான் எங்க குடும்பமே முன்னுக்கு வந்தது. என் சினிமா பயணத்துக்கும் அவங்கதான் தூண். இந்த படத்தோட இணை தயாரிப்பாளர் லிஸ்ட்ல என் அக்கா ‘சுப்ரா’ பெயரும் இருக்கும். அதேபோல எங்க அம்மாவோட உழைப்பும் பெருசு. என் வாழ்க்கையில பெண்களோட பங்கு ரொம்ப முக்கியமானது. அப்புறம் ஏன் நான் லேடி சென்ட்ரிக் படங்கள்ல நடிக்கக் கூடாது?
பழைய பாணியை உடைக்கிற படமா ‘கட்டா குஸ்தி 2’ இருக்கும். மனைவியை நேஷனல் லெவல் போட்டியில ஜெயிக்க வைக்கப் போராடுற புருஷன், அதனால வர்ற ரோலர் கோஸ்டர் கஷ்டங்களை எப்படி காமெடியா சமாளிக்கிறார்ங்கிறதுதான் கதை!”
“ராட்சசன், எஃப்.ஐ.ஆர்-ல முடியாதது இதுல சாத்தியமாச்சு!”
“முண்டாசுப்பட்டி, ராட்சசன், இன்று நேற்று நாளை, எஃப்.ஐ.ஆர்-னு என்னோட பல ஹிட் படங்களுக்கு பார்ட் 2 எடுக்கணும்னு ஆசைப்பட்டும் சில காரணங்களால முடியாம போயிடுச்சு. அதான், இந்த முறை எப்படியாவது செல்லாவிடம் பேசி பார்ட் 2-வை கொண்டு வந்தாச்சு!”
“காமெடிதான் பாஸ் இருக்கறதுலயே கஷ்டம்!”
“செண்டிமெண்ட், ஆக்ஷன் எல்லாம் எனக்கு அசால்ட்டா வரும். ஆனா காமெடிதான் ரொம்பக் கஷ்டம். அதுல டைமிங் மிஸ்ஸானா மொத்தமும் காலி, போரடிச்சுடும். மக்கள் தங்களோட கவலைகளை மறந்து சிரிக்கத்தான் தியேட்டருக்கு வர்றாங்க. அதனால வருஷத்துக்கு ஒரு தடவையாவது ஒரு காமெடி படமாவது பண்ணிடணும்னு முடிவு பண்ணியிருக்கேன்.”
“வியாபாரத்துல டபுள் ஜாக்பாட்!”
“என் சினிமா கேரியர்லயே ரிலீஸுக்கு முன்னாடி அதிக லாபம் கொடுத்த, பெரிய பிசினஸ் ஆன படம் இதுதான்! படம் பார்த்துட்டு ஐசரி கணேஷ் சார், ‘என் நிறுவனத்துல வந்த படங்களிலேயே இதுதான் பெஸ்ட்’னு சொன்னார். லாபம் எத்தனை கோடின்னு சொல்ல முடியாது, ஆனா பட்ஜெட்டைத் தாண்டி விண்டேஜ் கலெக்ஷன்ல ஒட்டுமொத்த டீமும் பயங்கர குஷியில இருக்கோம்!” என்று துள்ளலோடு முடித்தார் விஷ்ணு விஷால்.

