‘டெக்சாஸ் டைகர்’ ஷூட்டிங் ஓவர்: ஆடியோ ரைட்ஸைக் கைப்பற்றி மாஸ் காட்டும் சோனி மியூசிக்!

‘டெக்சாஸ் டைகர்’ ஷூட்டிங் ஓவர்: ஆடியோ ரைட்ஸைக் கைப்பற்றி மாஸ் காட்டும் சோனி மியூசிக்!

சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் ‘டெக்சாஸ் டைகர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதற்கிடையே, படத்தின் ஆடியோ உரிமையை உலகின் முன்னணி இசை நிறுவனமான சோனி மியூசிக் கைப்பற்றி, ரிலீஸுக்கான முதல் அதிரடி மைல்கல்லை எட்டியுள்ளது!

இளம் திறமைகளின் கூட்டணியில் உருவாகும் இப்படத்தோடு சர்வதேசப் புகழ்பெற்ற சோனி மியூசிக் இணைந்திருப்பது திரையுலகினர் மத்தியில் படம் மீதான வியாபார நம்பிக்கையை எகிற வைத்துள்ளது. சோனி மியூசிக்கின் உலகளாவிய ரீச்சும், வலுவான புரோமோஷன்களும் படத்திற்கான எதிர்பார்ப்பை தியேட்டர் ரிலீஸிற்கு முன்பே செம ஹைப் ஆக்கும் என்பதில் சந்தேகமில்லை.இயக்குநர் செல்வகுமார் திருமாறன் மகிழ்ச்சி:

“படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததில் மகிழ்ச்சி. அதைவிட, சோனி மியூசிக் போன்ற சர்வதேச பிராண்டுடன் இணைந்திருப்பது ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் பெருமையான தருணம். எங்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாகவே இந்த கூட்டணியை பார்க்கிறோம். படத்தின் இசையையும், அதன் உலகத்தையும் ரசிகர்கள் ரசிக்கப் போகும் அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்!”

முழுக்க முழுக்க பொழுதுபோக்கு, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் விறுவிறுப்பான ஆக்‌ஷன் கதையோடு அனைத்து வயதினரையும் கவரும் பக்கா தியேட்டர் மெட்டீரியலாக ‘டெக்சாஸ் டைகர்’ தயாராகி வருகிறது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் மற்றும் பாடல்கள் ரிலீஸ் குறித்த தகவல்கள் விரைவில் வரிசையாக வெளியாகவுள்ளன.

பின்னணிக் கூட்டணி:

  • தயாரிப்பு நிறுவனம்: யுகே ஸ்குவாட்

  • எழுத்து, இயக்கம்: செல்வகுமார் திருமாறன் (பேமிலி படம் புகழ்)

  • நட்சத்திரங்கள்: ஹிருது ஹரூன் (டியூட், தக்ஸ், ஆல் வி இமேஜின் அஸ் லைட் புகழ்), சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் ரோகிணி மொல்லேட்டி.

Related Posts