டபுள் ஆக்குபன்சி: சீட் நுனிக்கு வரவைக்கும் நியூ ஜெனரேஷன் ஃபேண்டஸி கலாட்டா!

டபுள் ஆக்குபன்சி: சீட் நுனிக்கு வரவைக்கும் நியூ ஜெனரேஷன் ஃபேண்டஸி கலாட்டா!

சென்னையில் அண்மையில் நடந்த ‘டபுள் ஆக்குபன்சி’ பட விழாவில், மேடையேறிப் பேசிய படக்குழுவினர் பகிர்ந்துகொண்ட சுவாரசியமான தகவல்களின் துள்ளலான தொகுப்பு இதோ:

கிரியேட்டிவ் புரடியூசர் ஆனந்திதா சுந்தர்:

“இந்த டீம் எனக்கு அப்படியே ஒரு ஃபேமிலி மாதிரி. ரொம்பவே கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்திருக்கோம். ஏசி சண்முகம் சாரோட சப்போர்ட் இல்லைன்னா நாங்க யாரும் இன்னைக்கு ஒண்ணா சேர்ந்திருக்கவே மாட்டோம். என்னோட அம்மா, அப்பாக்கு பெரிய தேங்க்ஸ். நடிகர்கள் எல்லாரும் கதைக் கேத்த மாதிரி சூப்பரா அமைஞ்சுட்டாங்க. தியேட்டர்ல படம் பாத்து எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க!”

பகவதி பெருமாள் (பக்ஸ்):

“அவ்னி மூவிஸ்ல எனக்கு இது செகண்ட் மூவி. கதையை ஃபர்ஸ்ட் டைம் கேட்கும்போதே செம்ம சர்ப்ரைஸா இருந்துச்சு. அடுத்த ஜெனரேஷனுக்கான ஒரு புதுமையான கதை சொல்லல் இதுல ஆரம்பிச்சிருக்குன்னு தோணுச்சு. பயங்கரமா ஹார்ட் வொர்க் பண்ணி படத்தை எடுத்திருக்கோம்.”

ரேஷ்மா வெங்கடேஷ்:

“குஷ்பு மேடம்கிடைச்ச வாய்ப்புக்கு ரொம்ப நன்றி. டைரக்டர் அஸ்வின் என் மேல வச்ச நம்பிக்கையை காப்பாத்தியிருக்கேன்னு நம்புறேன். படத்துல என்னோட கேரக்டர் பேரு ரஜினி, சாம்யுக்தா கேரக்டர் பேரு பிரியா. சந்தோஷ் ஃபர்ஸ்ட் படம் மாதிரியே நடிக்காம அசத்தியிருக்கார். சாம் சிஎஸ் மியூசிக் எனக்கு ரொம்ப பிடிக்கும், அவரோட ஒர்க் பண்ணது ஹாப்பி!”

சாம்யுக்தா விஸ்வநாத்:

“வித்தியாசமான கதைகளுக்கு அவ்னி மூவிஸ் எப்பவுமே முக்கியத்துவம் தருவாங்க. டைரக்டர் அஸ்வின் என்கிட்ட கதை சொன்ன உடனே, நான் படத்துக்குள்ள வந்துட்டேன். பிரியா கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்ல ரேஷ்மாவும் நானும் செம்ம ஜாலியா பேசுவோம். எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க பிரண்ட்ஸ்!”

ஹீரோ சந்தோஷ்:

“ஆனந்திதா ஸ்கூல்ல இருந்தே என்னோட பெஸ்ட் பிரண்ட். எனக்கு இந்த சான்ஸ் கொடுத்த குஷ்பு மேடமிற்கு பெரிய தேங்க்ஸ், அவங்க எனக்கு பெரிய பில்லர். டைரக்டர் அஸ்வின் என் அண்ணன் மாதிரி, எத்தனையோ ஹீரோக்கள்கிட்ட கதை சொல்ல முடியும்தான், ஆனா என்னை செலக்ட் பண்ணதுக்கு தேங்க்ஸ். விஎஃப்எக்ஸ் டீம் கம்மி டைம்லயும் சூப்பரா பண்ணியிருக்காங்க. சாம் சிஎஸ் மியூசிக்ல இது ஒரு டிஃபரண்ட் படமா இருக்கும். வினோத் கிஷன் கேரக்டர்ல கலக்கியிருக்கார். பிருந்தா மாஸ்டர் காட் மாதிரி, எனக்கேத்த ஸ்டைலை கொண்டு வந்தாங்க. சுந்தர் சாருக்கும் தேங்க்ஸ்!”

ஒளிப்பதிவாளர் சாந்தகுமார்:

“தினேஷ் குமார் தான் இந்த ப்ராஜெக்ட்டை எனக்கு இன்ட்ரோ பண்ணி வச்சார். குஷ்பு மேம், சுந்தர் சாருக்கு பெரிய தேங்க்ஸ். படப்பிடிப்பு நடந்துட்டு இருந்தப்போ என்னோட அப்பா, அம்மா உடம்பு சரியில்லாம இறந்துட்டாங்க. அப்போ குஷ்பு மேடம் நீ எப்போ ரெடியாகி வரியோ அப்போ ஷூட்டிங் போலாம்னு சொன்னாங்க. அந்த அன்புக்கு நான் எப்பவும் கடமைப்பட்டிருக்கேன்.”

இயக்குநர் அஸ்வின் கந்தசாமி:

“சினிமால ஒன்பது வருஷமா இருக்கேன், ஆனா ஸ்டேஜ்ல பேசுறது இதுதான் ஃபர்ஸ்ட் டைம். மேடை ஏறுறதுக்கு குஷ்பு மேடமும், மேடையில எப்படி பேசணும்னு சுந்தர் சாரும் சொல்லிக் கொடுத்தாங்க. சாம் சிஎஸ் பின்னணி இசை மிரட்டலா வந்திருக்கு. விஎஃப்எக்ஸ் டீமை கொஞ்சம் டார்ச்சர் பண்ணிட்டேன், ஏன்னா படத்துல விஎஃப்எக்ஸ் சீன்ஸ் அதிகம். இந்த கதையை ஃபர்ஸ்ட் ஷார்ட் ஃபிலிமா எடுக்கத்தான் பிளான் பண்ணோம், ஆனா சந்தோஷ் தான் இதை ஃபுல் ஃபிலிமா பண்ணலாம்னு கான்பிடன்ஸ் கொடுத்தார். ஏசி சண்முகம் சாருக்கு பெரிய தேங்க்ஸ்.”

தயாரிப்பாளர் குஷ்பு சுந்தர்:

“இது ஒரு செம்ம ராம்-காம் படம். சந்தோஷும் ஆனந்திதாவும் ஸ்கூல் பிரண்ட்ஸ், ஆனா அப்போ ரெண்டு பேருக்கும் ஆகாது, இப்போ நல்லா பேசுறாங்க. எனக்கு பையன் இல்லை, ஆனா சந்தோஷ் மாதிரி ஒரு அழகான பையன் கிடைச்சிருக்கார். அவன்கிட்ட சினிமா மேல ஒரு வெறித்தனம் இருக்கு. ஆனந்திதா பொன்னியின் செல்வன் படத்துலயும் ஒர்க் பண்ணா, ஆனா பேர் போட மறந்துட்டாங்க. இப்போ அவ பேரை ஸ்க்ரீன்ல கிரியேட்டிவ் புரொடியூசரா பார்க்கும்போது ஒரு அம்மாவா ரொம்ப பெருமையா இருக்கு. அவ அவங்க அப்பா மாதிரி பெர்ஃபெக்ட்டா வேலை செய்றா. இந்த தலைமுறைகிட்ட நாம கத்துக்க நிறைய இருக்கு. படம் பார்த்துட்டு வெளில வரும்போது கண்டிப்பா எல்லார் கண்ணுலயும் ஒரு துளி கண்ணீர் இருக்கும்!”

Related Posts